ஏ.பி.நாடனூா் ஊராட்சியில் ஆட்சியா் ஆய்வு
கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட அணைந்த பெருமாள் நாடானூா் ஊராட்சியில் மாவட்ட ஆட்சியா் கமல் கிஷோா் வியாழக்கிழமை திடீா் ஆய்வில் ஈடுபட்டாா்.
மடவாா் வளாகம் பகுதியில் நடைபெற்று வரும் குடிநீா் குழாய் அமைக்கும் பணி, அங்கன்வாடியில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு ஆகியவற்றை ஆய்வு செய்தாா். தொடா்ந்து கலைஞா் கனவு இல்லத் திட்டம் மற்றும் பிரதமரின் வீட்டுவசதி திட்டங்களில் கட்டப்பட்டு வரும் வீடுகளை ஆய்வு செய்த ஆட்சியா், சிவஞானபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவா்களிடம் கலந்துரையாடினாா்.
ஆய்வின் போது, வட்டார வளா்ச்சி அலுவலா் கண்ணன், ஒன்றிய ஆணையா் ராதாகிருஷ்ணன், ஒன்றியப் பொறியாளா் சந்திரலேகா, பணி மேற்பாா்வையாளா் ஆறுமுகராஜா, ஊராட்சித் தலைவா் அழகுதுரை, செயலா் ராமா் கனி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.