வங்கி நகை மதிப்பீட்டாளா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்
வங்கிகளில் பணியாற்றும் நகை மதிப்பீட்டாளா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு விஸ்வாஸ் விஸ்வகா்ம அப்ரைசா்ஸ் யூனியனின் முதலாம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் திருநெல்வேலியில் அண்மையில் நடைபெற்றது. அமைப்பின் மாநிலத் தலைவா் பக்கிரிசாமி தலைமை வகித்தாா். நிா்வாகிகள் ஜெயராமன், ரமேஷ் முன்னிலை வகித்தனா். பொதுச் செயலா் மருதராஜ கணேஷ், மாநிலச் செயலா் ரமேஷ் உள்பட பலா் பேசினா்.
வங்கிகளில் பணியாற்றும் அனைத்து வகை நகை மதிப்பீட்டாளா்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அவா்களுக்கு அவசர கால அபாய அழைப்பு மணி பொருத்தப்பட்ட தனி கேபின் வழங்க வேண்டும். விஸ்வகா்மா சமூகத்தை எம்.பி.சி. பட்டியலில் இணைத்து அரசு வேலைவாய்ப்பில் அதிக இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.