பாட்ஷா பட வசனத்தில் ரஜினி புத்தாண்டு வாழ்த்து!
பாட்ஷா திரைப்படத்தின் வசனத்தை பதிவிட்டு நடிகர் ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் ஆங்கிலப் புத்தாண்டை பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் கொண்டாட்டத்துடன் மக்கள் வரவேற்று வருகின்றனர்.
ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்து செய்திகளை பகிர்ந்து வருகின்றனர். நாட்டின் அரசியல் தலைவர்களும் முக்கிய பிரபலங்களும் தங்களின் வாழ்த்து செய்திகளை மக்களுக்கு பகிர்ந்து வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்த் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள வாழ்த்து செய்தியில் தெரிவித்திருப்பதாவது:
“நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான். கை விட மாட்டான். கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான். ஆனா கை விட்டுடுவான்.
புத்தாண்டு நல்வாழ்த்துகள். 2025-ஐ வரவேற்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.