உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா மோதல்!
தெலுங்கில் அறிமுகமான அதிதி ஷங்கர்..! முதல் பாடல்!
நடிகை அதிதி ஷங்கர் முதல்முறையாக தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். பைரவம் என்ற இந்தப் படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.
உக்ரம் படத்தை இயக்கிய விஜய் கனகமேடலா இந்தப் படத்தை இயக்கியுள்ளார். கே.கே.ராதாமோகன் தயாரித்துள்ள இந்தப் படத்தில் நடிகர் பெல்லம்கொண்ட ஸ்ரீனிவாஸ் நாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக அதிதி நடிக்கிறார்.
ஓ வெண்ணிலா என்ற முதல் பாடலின் லிரிக்கல் விடியோ வெளியாகியுள்ளது. இந்தப் படத்துக்கு ஸ்ரீ சரண் பாகலா இசையமைத்துள்ளார்.
ஷங்கரின் மகளான் அதிதி ஷங்கர் விருமன் படத்தில் அறிமுகமானார். மாவீரன் படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது.
இதற்கடுத்து ஒன்ஸ் மோர் படத்தில் கைதி பட புகழ் அர்ஜுன் தாஸ் உடன் நடித்துள்ளார். விரைவில் இந்தப் படம் திரைக்கு வரவிருக்கிறது.
தெலுங்கில் அறிமுகமாகியிருக்கும் அதிதிக்கு இந்தப் படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது.