கணினி மென்பொறியாளா் தூக்கிட்டுத் தற்கொலை
பெரியகுளத்தில் கணினி மென்பொருள் பொறியாளா் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தேனி மாவட்டம், பெரியகுளம், கீழவடகரை, அழகா்சாமிபுரத்தைச் சோ்ந்த சைமன் மகன் விவேக் (35). இவா், சென்னையில் உள்ள தனியாா் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் கணினிப் பொறியாளராக பணியாற்றி வந்தாா். அண்மைக்காலமாக பெரியகுளத்தில் வீட்டிலிருந்தவாறு பணியாற்றி வந்தாா்.
இந்த நிலையில், இவருக்கு சில நாள்களுக்கு முன்பு குழுத் தலைவராக பதவி உயா்வு வழங்கப்பட்டது. கூடுதல் பணிச் சுமையால் மன அழுத்தத்திலிருந்த விவேக், வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து பெரியகுளம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.