செய்திகள் :

ரசிகை பலியான விவகாரம்: அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன்!

post image

ரசிகை பலியான விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்திலுள்ள திரையரங்கில் டிச. 4 ஆம் தேதி புஷ்பா 2 படம் பார்க்க அல்லு அர்ஜுன் வந்திருந்தபோது, அவரைக் காணச் சென்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார்.

அவரின் 8 வயது மகன் படுகாயம் அடைந்தார். இச்சம்பவத்தில் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு ஒருநாள் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில், அல்லு அர்ஜுன் தரப்பில் வாதாடிய மூத்த வழக்குரைஞர், அல்லு அர்ஜுன் வேண்டுமென்றே யாரையும் புண்படுத்த விரும்பவில்லை. இதற்கு முன்னதாக, ஹிந்தி திரைப்படமான ரயீஸ் திரைப்படத்தின் சிறப்புக் காட்சியிலும் ஒருவர் உயிரிழந்ததாக சுட்டிக்காட்டினார்.

நீதிமன்றத்தில் வாதங்கள் கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் நீடித்தன. இந்தச் சம்பவத்தில் நடிகர் மீது மட்டும் குற்றம் சாட்ட முடியாது என்று ரெட்டி எடுத்துரைத்தார்.

இதுவரை சந்தியா திரையரங்க உரிமையாளர்கள் உள்பட 7 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிபந்தனைகளின்படி குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சிக்கட்பல்லி காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிக் பாஸ் 8 வெற்றியாளர் பெயரைக் கூறிய அன்ஷிதா!

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார் என்பது குறித்த கேள்விக்கு நடிகை அன்ஷிதா பதிலளித்துள்ளார். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பிக் பாஸ் சீசன் 8 நி... மேலும் பார்க்க

உன்னி முகுந்தனின் மார்கோ ரூ. 100 கோடி வசூல்!

நடிகர் உன்னி முகுந்தன் நடித்த மார்கோ திரைப்படம் ரூ. 100 கோடியை வசூலித்துள்ளது.இயக்குநர் ஹனிப் அதேனி இயக்கத்தில் நடிகர் உன்னி முகுந்தன் நடித்த மார்கோ திரைப்படம் கடந்த டிச. 20 தேதி வெளியானது. அதிக வன்மு... மேலும் பார்க்க

பிக் பாஸ் வீட்டின் கடைசி போட்டியாளர், இப்போது முதலிடத்தில்!

பிக் பாஸ் வீட்டில் கடைசியாக, 24வது போட்டியாளராகக் கலந்துகொண்ட ரயான், பிக் பாஸ் வீட்டின் முதல் இறுதிப்போட்டியாளராகத் தேர்வாகியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமையே இறுதி சுற்றுக்குத் தேர்வாகும் போட்டிகள் நிறை... மேலும் பார்க்க

முபாசா இந்தியாவில் ரூ.150 கோடி வசூல்!

முபாசா திரைப்படம் இந்தியளவில் ரூ.150 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.தி லைன் கிங் (the lion king) திரைப்படம் 2019 இல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. உலகம் முழுக்க வசூலில் சாதனை நிகழ்... மேலும் பார்க்க

பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதியின் நண்பன்! ரசிகர்கள் பாராட்டு!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் கூடத்தில் விஜய் சேதுபதியின் நண்பர் கலந்துகொண்டார். அவரைக் கண்டதும் விஜய் சேதுபதி அவருடனும் அவரின் குடும்பத்தாருடனும் உரையாடிய விதம் பலரைக் கவர்ந்துள்ளது. பிக் பா... மேலும் பார்க்க

பல இயக்குநர்கள் இஷ்டத்துக்கு படப்பிடிப்பு நடத்துகிறார்கள்: ராஜீவ் மேனன்

ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் அதிக நாள்கள் படப்பிடிப்பு செய்யும் இயக்குநர்களைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.இந்தியளவில் முன்னணி ஒளிப்பதிவாளராக அறியப்பட்டவர் ராஜீவ் மேனன். ’மின்சார கனவு’, ‘கண்டுகொண்டேன், க... மேலும் பார்க்க