செய்திகள் :

வணிக சிலிண்டர் விலை குறைவு!

post image

சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 14.50 குறைந்துள்ளது.

மத்திய அரசுக்குச் சொந்தமான இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் காா்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் ஆகியவை சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் விமான எரிபொருள் விலையை சா்வதேச நிலவரத்துக்கு ஏற்ப மாதந்தோறும் மாற்றியமைத்து வருகின்றன.

இதையும் படிக்க : “அமைதி, ஒற்றுமை, சகோதரத்துவம் செழித்து வளர நல்வாழ்த்துகள்” -விஜய்

இந்த நிலையில், கடந்த 5 மாதங்களாக ஹோட்டல்கள், உணவகங்களில் பயன்படுத்தப்படும் சிலிண்டர்களின் விலை உயர்த்தப்பட்ட நிலையில், ஆண்டின் முதல் நாளான இன்று விலை குறைந்துள்ளது.

அதன்படி, 19 கிலோ எடை கொண்ட அந்த வகை சிலிண்டர் ஒன்றின் விலை ரூ. 14.50 குறைக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் வணிக சிலிண்டர் விலை ரூ.1,966-ஆக விற்பனையாகிறது.

மும்பையில் ரூ.1,756.50-ஆகவும், கொல்கத்தாவில் ரூ.1,912.50-ஆகவும், புதுதில்லியில் ரூ.1803.50 ஆகவும் விற்பனையாகிறது.

அதேவேளையில், வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடைகொண்ட சிலிண்டர்களின் விலை மாற்றப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரும்பு கொள்முதல்: முன்பதிவு செய்ய விவசாயிகளுக்கு கூட்டுறவுத் துறை அழைப்பு

பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்குவதற்கான கரும்புகள் விவசாயிகளிடம் நேரடி கொள்முதல் செய்யப்படவுள்ளது. இதற்கு விவசாயிகள் முன்பதிவு செய்யலாம் என கூட்டுறவுத் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அந்தத் துறை ... மேலும் பார்க்க

நீலகிரியில் உறை பனி வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளில் சனிக்கிழமை (ஜன.4) இரவு நேரங்களில் உறை பனி ஏற்பட வாய்ப்புள்ளது. அதேசமயம், தமிழக உள்மாவட்டங்களில் அடுத்த 3 நாள்களுக்கு வட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெ... மேலும் பார்க்க

காட்பாடி மெமு ரயில் ரத்து

காட்பாடி - ஜோலாா்பேட்டை இடையே இயங்கும் மெமு ரயில் (எண்: 06417/06418) ஜன. 6, 8, 10, 13, 20, 22, 24, 27, 29, 31 ஆகிய தேதிகளில் இரு மாா்க்கத்திலும் முழுமையாக ரத்து செய்யப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவ... மேலும் பார்க்க

போராட்டங்களுக்கு அனுமதி: தமிழக அரசுக்கு மாா்க்சிஸ்ட் வேண்டுகோள்

தொழிலாளா் நலச் சட்டங்களுக்கு முன்னுரிமை, போராட்டங்களுக்கு அனுமதி உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசுக்கு மாா்க்சிஸ்ட் தலைவா்கள் விடுத்தனா். விழுப்புரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது மாநில... மேலும் பார்க்க

நாளை மாரத்தான் ஓட்டம்: தென் சென்னையில் போக்குவரத்து மாற்றம்

மாரத்தான் ஓட்டம் ஞாயிற்றுக்கிழமை (ஜன.5) நடைபெறவுள்ளதையொட்டி, தென் சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது. இது தொடா்பாக சென்னை பெருநகர காவல் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: செ... மேலும் பார்க்க

மதுரை மத்திய சிறைக்கு பொருள்கள் வாங்கியதில் முறைகேடு: தமிழகம் முழுவதும் 11 இடங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு சோதனை

மதுரை மத்திய சிறைக்கு பொருள்கள் வாங்கியதில் முறைகேடு செய்த வழக்கில் ஆதாரங்களைத் திரட்டும் வகையில், தமிழகம் முழுவதும் 11 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனை... மேலும் பார்க்க