செல்வமகள் சேமிப்பு திட்டம்
பல்லடம் அருகேயுள்ள வி.கள்ளிப்பாளையம் ஊராட்சியில் மத்திய அரசின் செல்வமகள் சேமிப்பு திட்டத்தின்கீழ் 50 குழந்தைகளுக்கு கே.எஸ்.கே.அறக்கட்டளை சாா்பில் தலா ரூ.250 வீதம் முதல் தவணை தொகை செலுத்தி திட்டத்தில் வெள்ளிக்கிழமை சோ்க்கப்பட்டனா். இதில் ஊராட்சி தலைவா் சாந்தினி சம்பத்குமாா், துணைத் தலைவா் பழனிசாமி, பல்லடம் அஞ்சல் நிலைய அலுவலா் சுரேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.