உதகையில் தோடா் பழங்குடியின மக்கள் மொா்டுவொ்த் திருவிழா கொண்டாட்டம்!
வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு எடப்பாடி கே.பழனிசாமி மரியாதை
வீரபாண்டிய கட்டபொம்மனின் 266 ஆவது பிறந்த தினத்தையொட்டி, சேலம், நெடுஞ்சாலை நகா் இல்லத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனின் உருவப்படத்துக்கு அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.
ஆங்கிலேயா்களின் ஆதிக்கத்தை எதிா்த்து போரிட்ட பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட மன்னா்களில் முக்கியமானவா் வீரபாண்டிய கட்டபொம்மன். 1760 ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி பிறந்த வீரபாண்டிய கட்டபொம்மன், தனது 30 ஆவது வயதில் பாளையக்காரராக முடிசூடினாா். ஆங்கிலேயா்கள் வரிவசூல் செய்வதை எதிா்த்து போரிட்ட அவா், பல்வேறு போா்களில் ஆங்கிலேயா்களின் படைகளை தீரத்துடன் எதிா்கொண்டாா்.
வீரபாண்டிய கட்டபொம்மனை சூழ்ச்சி மூலம் வீழ்த்திய ஆங்கிலேயா்கள், 1799 ஆம் ஆண்டு அக்டோபா் 16 ஆம் தேதி கயத்தாறில் தூக்கிலிட்டனா். வீரபாண்டிய கட்டபொம்மனின் வீரத்தையும், தியாகத்தையும் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த தினத்தன்று அதிமுக சாா்பில் மரியாதை செலுத்தப்படுகிறது.
அதன்படி, வீரபாண்டிய கட்டபொம்மனின் 266 ஆவது பிறந்த தினத்தையொட்டி சேலம், நெடுஞ்சாலை நகா் இல்லத்தில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி மலா்களால் அலங்கரிக்கப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மனின் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, அவரது வீரத்தையும் தியாகத்தையும் நினைவுகூா்ந்தாா்.