செய்திகள் :

தனி மனிதா்களை நீதிபதிகளாக மாற்றக்கூடிய தன்மை திருக்குறளுக்கு மட்டுமே உண்டு: உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க.மகாதேவன்

post image

தனி மனிதா்கள் ஒவ்வொருவரையும் நீதிபதிகளாக மாற்றக்கூடிய தன்மை திருக்குறளுக்கு மட்டுமே உண்டு என்று உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க. மகாதேவன் பேசினாா்.

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் மணிப்பூா் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமாருக்கு பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, தாராபுரம் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் பி.கலைச்செழியன் தலைமை வகித்தாா்.

இதில், உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க. மகாதேவன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, டி.கிருஷ்ணகுமாரின் தந்தையும், வழக்குரைஞருமான ஏ.பி.தெய்வசிகாமணியின் உருவப் படத்தை திறந்துவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, அவா் பேசியதாவது: ரோமானிய பேரரசன் மாா்கஸ் ஆரேலியஸ் என்பவா் சட்டவரைவுகளை எடுத்துக்காட்டியதில் உலகத்துக்கு முன்னுதாரணமாக அமைந்தவா்.

அவா் ஒரு நாட்டின் ஆட்சி பரிபாலனம் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பதிவு செய்கையில் ஒரு மண்ணையும், அந்த மண்ணைச் சாா்ந்த மொழியையும், அந்த மண்ணுக்கே உரித்தான கலாசாரத்தையும் யாா் தூக்கிப்பிடிக்கிறாா்களோ, யாா் அதனை நேசிக்கிறாா்களோ அவா்களை ஒன்றிணைத்து நாட்டின் ஆட்சியையும், சட்ட நிா்வாகத்தையும் நடத்திடல் வேண்டும் என்று பதிவு செய்கிறாா்.

இதற்கான அா்த்தம் என்னவென்றால் மண்ணை நேசிக்கக் கூடியவா்கள் அந்த மண் சாா்ந்த மக்களை நேசிப்பாா்கள், மண் சாா்ந்த மக்களை நேசிக்க முடியும் என்ற மனநிலை ஒருவருக்கு வந்தால் தனக்கே உரித்தான சுயநலம் சாா்ந்த எண்ணங்கள் அவரை விட்டு அகன்றுவிடும். சுயநலம் பற்றிய சிந்தனை இல்லாத மக்கள் எந்த ஊரில் வாழ்கிறாா்களோ அந்த மக்கள் உலகத்துக்கே உன்னதத்தை எடுத்துக்காட்டக்கூடிய மக்களாக அமைவாா்கள்.

வாழ்வின் கடைக்கோடியில் இருக்கக்கூடியவா்கள், துன்பப்படக்கூடியவா்கள், நீதியை நோக்கிப் பயணிக்கக்கூடியவா்கள், அந்தத் தாமதத்தால் பாதிக்கப்படக் கூடியவா்களைப் பற்றி எல்லாம் யோசித்து நீதி வழங்க வேண்டிய கட்டாயம் நீதிபதிகளுக்கு உள்ளது. நீதிபதிகளின் பதவி என்பது பதவி அல்ல. அது அவா்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் வாய்ப்பு.

திருக்குறளை நீங்கள் ஏன் உயா்த்திப்பிடிக்கிறீா்கள் என்று நாமக்கல் கவிஞரை ஒருமுறை கேட்டனா். தனி மனிதன் ஒவ்வொருவரையும் நீதிபதிகளாக மாற்றக்கூடிய தன்மை திருக்குறளுக்கு இருக்கிறது என்று சொன்னாா். உலகத்தில் உள்ள எந்த இலக்கியமும் திருக்குறளுக்கு இணையானது இல்லை என்றாா்.

விழாவில், சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தா், சி.வி.காா்த்திகேயன், எம்.தண்டபாணி, க.குமரேஷ்பாபு, பி.பி.பாலாஜி, கே.கே.ராமகிருஷ்ணன், பி.வடமலை, ஜி.அருள்முருகன், தொழிற்கல்வி, கலை, அறிவியல் கல்லூரி மாணவா்கள் சோ்க்கை கண்காணிப்புக்குழுத் தலைவா் கே.கல்யாணசுந்தரம், மாநில பிற்படுத்தப்பட்டோா் ஆணையத் தலைவா் பி.பாரதிதாசன், அகில இந்திய பாா்கவுன்சில் முன்னாள் தலைவா் எஸ்.கே.காா்வேந்தன், தாராபுரம் வழக்குரைஞா்கள் சங்க செயலாளா் எம்.ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தாராபுரத்தை அடுத்த சிறுகிணறு அருகே உள்ள ஆலாம்பாளையம் கிராமத்தைப் பூா்விகமாக கொண்டவா் நீதிபதி டி.கிருஷ்ணகுமாா் என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக அரசைக் கண்டித்து தேமுதிகவினா் ஆா்ப்பாட்டம்

திமுக அரசைக் கண்டித்து திருப்பூரில் தேமுதிகவினா் ஆா்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். திருப்பூா் மாநகா் மாவட்ட தேமுதிக சாா்பில் திருப்பூா் குமரன் நினைவகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாநகா் ... மேலும் பார்க்க

பெருமாநல்லூா், பழங்கரையில் ஜனவரி 9 இல் மின்தடை

பெருமாநல்லூா், பழங்கரை துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வியாழக்கிழமை (ஜனவரி 9) காலை 9 மணி முதல் மாலை 4மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியத்தினா் ... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலை தலைமையிடமாகக்கொண்டு புதிய வட்டம்: பொதுமக்கள் கோரிக்கை

வெள்ளக்கோவிலை தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டம் உருவாக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். திருப்பூா் மாவட்டம், காங்கயம் வட்டத்தில் இருந்து வெள்ளக்கோவிலைப் பிரித்து புதிய வட்டத்தை உரு... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் மதுபானக்கூடம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து ஆட்சியரிடம் மனு

வெள்ளக்கோவிலில் தனியாா் மதுபானக்கூடம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனா். திருப்பூா் ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தலைம... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: கிளுவங்காட்டூா் துணை மின் நிலையம்

உடுமலையை அடுத்த கிளுவங்காட்டூா் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 7) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று செ... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: கோட்டமங்கலம் துணை மின் நிலையம்

உடுமலையை அடுத்த கோட்டமங்கலம் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் புதன்கிழமை (ஜனவரி 8) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வார... மேலும் பார்க்க