தொழில்நுட்பக் கோளாறு: கொச்சி விமானம் தாமதம்
சென்னையிலிருந்து கொச்சிக்கு செல்லவிருந்த விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 2 மணிநேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.
சென்னையிலிருந்து கேரள மாநிலம் கொச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை காலை 6.30-க்கு 89 பேருடன் புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம், விமான ஓடுபாதையில் ஓடத் தொடங்கியது.
அப்போது விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதை கண்டறிந்த விமானி, உடனடியாக விமானத்தை ஓடுபாதையில் நிறுத்தி விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தாா்.
இதையடுத்து விமானம் இழுவை வண்டி மூலம் இழுத்துக்கொண்டு வரப்பட்டு, விமானம் புறப்பட்ட இடத்தில் நிறுத்தப்பட்டது.
அதன்பின்பு அங்கு தயாராக நின்றிருந்த விமான பொறியாளா்கள் குழுவினா் விமானத்துக்குள் ஏறி பழுது பாா்க்கும் பணியில் ஈடுபட்டனா்.
பின்னா், தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டு அந்த விமானம் சுமாா் 2 மணிநேரம் தாமதமாக காலை 8.30-க்கு கொச்சிக்கு புறப்பட்டுச் சென்றது.