நடப்பாண்டு ஜிடிபி வளர்ச்சி 4 ஆண்டுகளில் இல்லாத அளவு சரியும்!
போதை மாத்திரைகள் விற்பனை: 2 போ் கைது
கோவை மாநகரில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை ஆா்.எஸ்.புரம் - தடாகம் சாலை பகுதியில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக ஆா்.எஸ்.புரம் போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது.
இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் முத்து தலைமையிலான போலீஸாா் அந்தப் பகுதியில் ஆய்வு செய்தனா். அப்போது, வாழைக்காய் மண்டி அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றுகொண்டிருந்த 2 இளைஞா்களைப் பிடித்து விசாரித்தனா். அவா்கள் சொக்கம்புதூா் பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணதாஸ் (24), தெலுங்குபாளையம் பிரிவு நாராயணசாமி நகரைச் சோ்ந்த பொன்மணி (24) என்பது தெரியவந்தது.
தொடா்ந்து அவா்களிடம் மேற்கொண்ட சோதனையில் 11 போதை மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.