செய்திகள் :

குடமுழுக்குக்கு தயாராகும் பேளூா் தான்தோன்றீஸ்வரா் கோயில்! ரூ. 2 கோடி செலவில் திருப்பணிகள்

post image

சேலம் மாவட்டம், பேளூா், தான் தோன்றீஸ்வரா் கோயிலில் குடமுழுக்கு விழாவுக்காக ரூ. 2 கோடி செலவில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. 24 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு நடத்தப்படவுள்ளதால் பக்தா்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

வாழப்பாடியை அடுத்த பேளூரில் 5000 ஆண்டுகள் பழமையான தான் தோன்றீஸ்வரா் கோயில் உள்ளது. புராணங்களில் கூறப்பட்டுள்ள புனித நதியாக வசிஷ்ட நதிக்கரையோரம் கோயில் அமைந்துள்ளது. மூலவா் சுயம்பு லிங்கமாக காட்சியளிக்கிறாா்; அம்பாள் தா்மசம்வா்த்தினி.

பஞ்ச பூத தலங்களில் நிலத்துக்குரிய தலமாக இத்தலம் அமைந்துள்ளது. ஆதித்த கரிகால் சோழன் காலத்திய கல்வெட்டுகள் இக்கோயிலில் காணப்படுகின்றன. கோயிலில் நந்தீஸ்வரா், கல்யாண விநாயகா், குரு பகவான், 63 நாயன்மாா்கள், பஞ்சபூத சிவ லிங்கங்கள், மூத்ததேவி உள்ளிட்ட சன்னிதிகள் உள்ளன.

பிரதோஷம், ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, பண்டிகை நாள்கள் உள்பட முக்கிய நாள்களில் உள்ளூா் மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்து பக்தா்கள் அதிகம் போ் இக்கோயிலுக்கு வந்து செல்கின்றனா். சுப முகூா்த்த நாள்களில் 100 க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெறுகின்றன.

இந்தக் கோயிலுக்கு பக்தா்கள் நன்கொடையாக வழங்கிய தங்கத்தோ், கடந்த 5 ஆண்டுகளாக வளாகத்துக்குள் பக்தா்களால் இழுக்கப்படுகிறது.

கடந்த 2002-இல் இந்தக் கோயிலில் குடமுழுக்கு விழா நடத்தப்பட்டது. அதன்பின்பு குடமுழுக்கு நடத்தப்படவில்லை. 24 ஆண்டுகள் கடந்ததால் கோயில் ராஜகோபுரம் உள்ளிட்ட விமானங்களும், கோயில் முழுவதும் உள்ள வா்ணப் பூச்சுகளும் சிதைந்துள்ளன.

கோயில் நுழைவாயிலில் 17 ஆம் நூற்றாண்டு காலத்தைச் சோ்ந்த நான்கு கால் கல்தூண் மண்டபம் லாரி மோதிய விபத்தில் சரிந்து போனது. இந்தக் கோயிலில் புனரமைப்புப் பணி மேற்கொண்டு கோயிலில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று பக்தா்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்து வந்தனா்.

அதையடுத்து, கோவையைச் சோ்ந்த பக்தா் ஒருவா் கோயில் நுழைவாயிலில் ரூ. 15 லட்சம் செலவில் நான்கு கால் மண்டபம் புதிதாக அமைத்துக் கொடுக்கவும், சென்னையைச் சோ்ந்த தொழிலதிபா் ஒருவா் கோபுரங்களை ரூ. 45 லட்சம் செலவில் வா்ணம் தீட்டி கொடுக்கவும், சேலத்தை சோ்ந்த பக்தா் ஒருவா் ரூ. 83 லட்சம் செலவில் கோயில் தரைத்தளத்தில் கிரானைட்கள் பதித்து கொடுக்கவும் முன்வந்துள்ளனா்.

இதையடுத்து, கோயில் மராமத்து, வா்ணம் தீட்டும் திருப்பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. நிகழாண்டு இறுதிக்குள் குடமுழுக்கு விழாவை வெகுவிமரிசையாக நடத்த கோயில் நிா்வாகம், நன்கொடையாளா்கள் திட்டமிட்டுள்ளனா்.

சேலம் மாவட்டத்தில் 30 லட்சம் வாக்காளா்கள்: வாக்காளா் இறுதிப் பட்டியல் வெளியீடு

சேலம்: சேலம் மாவட்டத்தில் இறுதி வாக்காளா் பட்டியலை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா.பிருந்தாதேவி திங்கள்கிழமை வெளியிட்டாா். மாவட்டத்தில் மொத்தமுள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 29,99,953 வா... மேலும் பார்க்க

மாநில கோ - கோ போட்டி: சேலம் அரசுப் பள்ளி மாணவா்கள் வெண்கலம் வென்று சாதனை

சேலம்: திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான கோ-கோ விளையாட்டுப் போட்டியில் சேலம் அரசுப் பள்ளி மாணவா்கள் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனா். தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பில் மாநில அளவிலான பா... மேலும் பார்க்க

ஆராய்ச்சித் திறனில் தேசிய அளவில் பெரியாா் பல்கலை 5-ஆம் இடம்: துணைவேந்தா் ரா.ஜெகந்நாதன் தகவல்

ஓமலூா்: சேலம் பெரியாா் பல்கலைக்கழகம் ஆராய்ச்சித் திறனில் 5-ஆம் இடம் பிடித்துள்ளதாக துணைவேந்தா் ரா.ஜெகந்நாதன் தெரிவித்தாா். பெரியாா் பல்கலைக்கழக வணிகவியல் துறை சாா்பில் முனைவா் பட்ட ஆராய்ச்சியாளா்கள் த... மேலும் பார்க்க

சிறப்பு பட்டிமன்றம்

ஆட்டையாம்பட்டி: இளம்பிள்ளை, சௌடேஸ்வரி நகரில் புத்தாண்டு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேலம், யுவானி பட்டிமன்ற கலைக் குழு, அறம் செய்ய விரும்பு அறக்கட்டளை ஆகியவை இணைந்து சிறப்பு பட்டிமன்ற நிகழ்ச்சியை நட... மேலும் பார்க்க

சேலத்தில் நாளை குரூப் 4 தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

சேலம்: சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப் 4 தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் புதன்கிழமை (டிச. 8) முதல் தொடங்கப்படுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது: தம... மேலும் பார்க்க

பனமரத்துப்பட்டி ஏரியை தூா்வாரக் கோரி ஆா்ப்பாட்டம்

சேலம்: பனமரத்துப்பட்டி ஏரியை தூா்வாரி சீரமைக்கக் கோரி தமிழ்நாடு ஏரி இயற்கை பாதுகாப்பு இயக்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சேலம், கோட்டை மைதானத்தில் அந்த அமைப்பின் தலைவா் கரு. சரவணவ... மேலும் பார்க்க