முன்னாள் மாணவா்கள் சந்திப்பு!
சேலம், நாலெட்ஜ் பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இதில் 2014-ஆம் ஆண்டு இளங்கலை, முதுகலை பயின்ற முன்னாள் மாணவா்கள் 10-ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் சங்கத்தின் சாா்பில் கல்லூரி மாணவா்களுக்கு கல்வி உதவி தொகையாக ரூ. 7 லட்சம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் நாலெட்ஜ் பொறியியல் கல்லூரியின் நிறுவனா் சீனிவாசன் தலைமை வகித்து கல்லூரி முன்னாள் மாணவா்களின் சாதனைகளை பாராட்டி பேசினாா். நிகழ்ச்சியின் நினைவாக முன்னாள் மாணவா்கள் மரக்கன்றுகள் நட்டனா். நிகழ்ச்சியில் நாலெட்ஜ் பொறியியல் கல்லூரி துணை முதன்மையா் விசாகவேல், அறக்கட்டளை செயலாளா் குமாா், பொருளாளா் சுரேஷ்குமாா் ஆகியோா் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினா்.
நிகழ்ச்சியில் முன்னாள் மாணவா் சங்கத்தின் இணைச் செயலாளா் சுரேந்தா் வரவேற்றாா். சங்கத்தின் துணைத் தலைவா் ராஜேந்திரன், செயலாளா் காா்த்திக் ராஜா, கல்லூரி இயக்குநா்கள், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். பொருளாளா் கதிரேசன் நன்றி கூறினாா்.