2025 -ல் என்ன நடக்கும்? `போர், எழுச்சிபெறும் நாடு..' - ஒரே மாதிரி கணித்த பாபா வாங்கா, நாஸ்ட்ராடமஸ்
2025ம் ஆண்டு பிறக்கிறது. ஒவ்வொரு வருட பிறப்பிலும் இந்த ஆண்டு நமக்கு ராசியானதாக அமையுமா என்பதை ஜோதிடம் பார்த்து அறிந்துகொள்ள விரும்புவர்.
இதேப்போல மொத்த உலகத்துக்கும் ஜோதிடம் சொன்ன தீர்க்கதரிசிகள் உள்ளனர். அவர்களுள் பாபா வாங்கா மற்றும் நாஸ்ட்ராடமஸ் புகழ் பெற்றவர்கர்கள். இவர்களது பல தீர்க்க தரிசனங்கள் இதற்கு முன்பு நிறைவேறியிப்பதாகக் கூறுகின்றனர்.
2025ம் ஆண்டு இவர்களின் தீர்க்க தரிசனங்கள் என்னென்ன என்பதை அறிய பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பாபா வாங்கா மற்றும் நாஸ்ட்ராடமஸ் இருவருக்கும் குறிப்பிடத்தக்க அளவில் பின் தொடர்பவர்கள் உள்ளனர். இன்றும் இவர்களது தீர்க்க தரிசனங்களை ஆராய்ந்து கூறிவருகின்றனர்.
1996ம் ஆண்டு மறைந்த பாபா வாங்கா செப்டம்பர் 11 தாக்குதல், இளவரசி டயானாவின் மரணம், செர்னோபில் டிசாஸ்டர் போன்ற சம்பவங்களை முன்னறிவித்ததாகக் கூறுகின்றனர். நாஸ்ட்ராடமஸ் தனது புத்தகத்தில் பல பேரழிவுகள் குறித்த தீர்க்க தரிசனங்களை எழுதியுள்ளதாகக் கூறுகின்றனர்.
பாபா வாங்கா கணிப்புகள்!
உலக அளவில் 2025-ம் ஆண்டு நடக்கப்போகும் விஷயங்களாக பல்கேரிய தீர்க்கதரிசி பாபா வாங்கா முன்னறிவித்துள்ளவை,
ஐரோப்பாவில் மக்கள் தொகையை பாதிக்கும் அளவு மிகப் பெரிய போர்
உலக அளவில் மிகப் பெரிய சக்தியாக ரஷ்யா எழுச்சி பெறுதல்
அமெரிக்காவின் மேற்கு கடற்கரையோரத்தில் முக்கிய நில அதிர்வு மற்றும் தொடர் இயற்கை பேரிடர்கள் ஏற்படும்
இறந்த எரிமலைகள் மீண்டும் உயிர்பெறுதல்
நாஸ்ட்ராடமஸ் எச்சரிக்கை!
பிரஞ்சு தீர்க்கதரிசி நாஸ்ட்ராடமஸின் புத்தகத்தின் படி சொல்லப்பட்டுள்ளா தீர்க்க தரிசனங்கள்,
ஐரோப்பிய எல்லையில் தீவிரமான போர்கள்
பிரிட்டனுக்குள் உள்நாட்டு போர் மற்றும் நோய் தாக்கம்
பழைய கொள்ளை நோய் திரும்புதல்
பாரம்பரிய மேற்கத்திய நாடுகளில் இருந்து உலகை கட்டுப்படுத்தும் சக்தி மாறுதல்
ஒரே மாதிரியான கணிப்புகள்!
பாபா வாங்கா 20ம் நூற்றாண்டில் பல்கேரியாவில் வாழ்ந்தவர். நாஸ்ட்ராடமஸ் 16ம் நூற்றாண்டில் பிரஞ்சு பகுதியில் வாழ்ந்தவர். பல ஆண்டுகள் மற்றும் கலாச்சார வித்தியாசத்துடன் வாழ்ந்த தீர்க்க தரிசிகளின் முன்னறிவிப்பில் சில ஒரே மாதிரி இருப்பதுண்டு.
2025ம் ஆண்டு உலகின் ஆதிக்க சக்தியாக இருக்கும் நாடு மாறுதல் மற்றும் ஐரோப்பாவில் பெரும் போர் ஆகிய விஷயங்களை இருவரும் கணித்துள்ளனர்.