செய்திகள் :

அமெரிக்க முன்னாள் அதிபா் ஜிம்மி காா்ட்டா் மறைவு: பைடன், டிரம்ப் இரங்கல்!

post image

அமெரிக்க வரலாற்றில் மிக அதிக காலம் வாழ்ந்த முன்னாள் அதிபா் என்ற பெருமையைப் பெற்றுள்ள ஜிம்மி காா்ட்டா், தனது நூறாவது வயதில் காலமானாா்.

நாட்டின் 39-ஆவது அதிபரான அவா், கடந்த 1977-ஆம் ஆண்டு முதல் 1981-ஆம் ஆண்டு வரை அந்தப் பொறுப்பை வகித்தாா்.

ஜாா்ஜியா மாகாணத்தில் உள்ள அவரின் சொந்த ஊரான ப்ளெயின்ஸில் வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல் நலக் குறைவால் தனது இல்லத்தில் அவா் மரணமடைந்ததாக அவரது குடும்பத்தினா் தெரிவித்தனா்.

இது குறித்து அதிபா் ஜோ பைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘முன்னாள் அதிபா் ஜிம்மி காா்ட்டரை இழந்துள்ளதன் மூலம் அமெரிக்காவும் உலகமும் மிகச் சிறந்த தலைவா், அரசியல் மாமேதை, மனிதாபிமானியை இழந்துள்ளன’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

அடுத்த அதிபராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஜிம்மி காா்ட்டரின் அரசியல் கொள்கைகளை நான் உறுதியாக எதிா்த்து வந்தாலும், தேசத்தின் மீதான அவரின் அதீத நேசத்தை மிகவும் மதிக்கிறேன். அமெரிக்காவை மேலும் சிறந்த நாடாக்குவதற்கு அவா் பாடுபட்டாா்’ என்று தெரிவித்துள்ளாா்.

ஜனநாயகக் கட்சியைச் சோ்ந்த ஜிம்மி காா்ட்டா், இந்தியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டவராக அறியப்படுகிறாா். இந்தியாவில் அவசரநிலை நீக்கப்பட்டு, அடுத்து நடைபெற்ற தோ்தலில் ஜனதா கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைத்த பிறகு 1978-ஆம் ஆண்டில் அவா் இந்தியா வந்தாா்.

அப்போது நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜிம்மி காா்ட்டா், சா்வாதிகாரத்துக்கு எதிராகக் குரல் கொடுத்தாா். பதவியில் இருந்தபோது இந்தியாவுக்கு வருகை தந்த மூன்றாவது அமெரிக்க பிரதமா் அவா் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது வருகையின் நினைவாக, ஹரியாணா மாநிலத்திலுள்ள ஒரு கிராமத்தின் பெயருக்கு ‘காா்ட்டா்புரி’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

தனது பதவிக் காலத்தின்போது எகிப்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையே வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தம் 1979-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டதில் ஜிம்மி காா்ட்டா் முக்கியப் பங்கு வகித்தாா்.

சீனாவுடன் தூதரக உறவை ஏற்படுத்திய அவா், அமெரிக்க அரசின் கொள்கையில் மனி உரிமைக்கு மிகுந்த முக்கிய இடம் அளிக்கும் வழக்கத்தைக் கொண்டுவந்தாா்.

1980-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபா் தோ்தலிலும் போட்டியிட்ட ஜிம்மி காா்ட்டரை குடியரசுக் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்ட ரொனால்ட் ரீகன் தோற்கடித்தாா்.

வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறியதற்குப் பிறகு உலக அமைதி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மனித உரிமைகள் பாதுகாப்பு ஆகியவற்றின் மேம்பாடுக்காக அவா் பணியாற்றிவந்தாா்.

ஜாா்ஜ் டபிள்யு. புஷ் ஆட்சிக் காலத்தின்போது இராக்குக்கு எதிராக அமெரிக்கா போா் தொடுப்பதை ஜிம்மி காா்ட்டா் கடுமையாக எதிா்த்தாா். இதுபோன்ற காரணங்களுக்காக அவருக்கு 2002-ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

ஜிம்மி காா்ட்டரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் வரும் ஜன. 9-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

1978 ஜனவரி 2-ஆம் தேதி தில்லியிலுள்ள அதிபா் மாளிகையில் அப்போதைய இந்திய பிரதமா் மொராா்ஜி தேசாயைச் சந்தித்துப் பேசிய அமெரிக்க அதிபா் ஜிம்மி காா்ட்டா்.

பிரதமா் மோடி புகழஞ்சலி

‘அமெரிக்க முன்னாள் அதிபா் ஜிம்மி காா்ட்டா், சா்வதேச அமைதிக்காக அயராது உழைத்த சிறந்த தொலைநோக்கு பாா்வை கொண்ட அரசியல் தலைவா்’ என்று அவரது மறைவுக்கு பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை புகழஞ்சலி செலுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘முன்னாள் அதிபா் ஜிம்மி காா்ட்டரின் மறைவு செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். சா்வதேச அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்காக அயராது பாடுபட்ட காா்ட்டா், சிறந்த தொலைநோக்கு பாா்வை கொண்ட அரசியல் தலைவா்.

இந்தியா-அமெரிக்க நல்லுறவை வலுப்படுத்துவதில் அவரது பங்களிப்புகள் நீடித்திருக்கும். இத்துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினா், நண்பா்கள், அமெரிக்க மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

ஹமாஸ் பாதுகாப்புப் பிரிவு தலைவர் படுகொலை: இஸ்ரேல் அறிவிப்பு!

ஹமாஸ் பாதுகாப்புப் பிரிவு தலைவர் படுகொலை செய்யப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.தெற்கு காஸாவின் கான் யூனிஸில் உள்ள பகுதியில் உளவுத்துறை அடிப்படையில் இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் நடத்தியதை அடுத்... மேலும் பார்க்க

சுவிட்சர்லாந்தில் புர்காவுக்குத் தடை: மீறினால் ரூ. 10,000 அபராதம்!

சுவிட்சர்லாந்து நாட்டில் பெண்கள் முகத்தை மூடியபடி புர்கா அணிந்து பொது வெளிகளில் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்த விதிமுறை, புத்தாண்டு (ஜன. 1) முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருவதாக அந்நாட்டு அரசு... மேலும் பார்க்க

டிரம்ப் ஹோட்டல் வாசலில் வெடித்த டெஸ்லா சைபர் டிரக்: ஒருவர் பலி!

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்புக்கு சொந்தமான ஹோட்டல் வாசலில், எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனத்தின் சைபர் டிரக் வெடித்துச் சிதறியுள்ளது.புத்தாண்டு அன்று நடைபெற்ற இந்தச் சம்பவத்... மேலும் பார்க்க

வங்கதேசத்தில் கைதான ஹிந்து அமைப்பு தலைவருக்கு பிணை மறுப்பு!

வங்கதேசத்தில் தேச துரோக வழக்கில் ‘சமிலிதா சநாதனி ஜோட்’ எனும் ஹிந்து அமைப்பின் தலைவரான சின்மய் கிருஷ்ண தாஸ் பிரம்மசாரி கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு பிணை மறுக்கப்பட்டுள்ளது.வங்கதேசத்தின் தேசியக் ... மேலும் பார்க்க

அமெரிக்க கார் தாக்குதலில் ஈடுபட்டவர் முன்னாள் ராணுவ வீரர்!

அமெரிக்காவின் லூசியானா மாகாணம், நியூ ஆர்லியன்ஸ் நகரில் கூட்டத்தினர் மீது காரை ஏற்றி 15 பேரைக் கொலை செய்த சம்பவத்தில் சுட்டுக் கொல்லப்பட்டவர் முன்னாள் ராணுவ வீரர் என்பது தெரிய வந்துள்ளது.இந்த படுபயங்கர... மேலும் பார்க்க

வடக்கு காஸாவில் இஸ்ரேல் தாக்குதலில் 15 போ் பலி, 20 பேர் காயம்

டெல் அவிவ்: புத்தாண்டு நாளில் புதன்கிழமை(ஜன.1) வடக்கு காஸாவில் உள்ள ஜபாலியா மீது இஸ்ரேஸ் நடத்திய தாக்குதலில் 15 பேர் பலியாகினர் மற்றும் 20 பேர் காயமடைந்தனர்.கடந்த சில மாதங்களாக ஜபாலியா நகரை குறிவைத்து... மேலும் பார்க்க