வங்தேசம்: ஷேக் ஹசீனா ஆட்சியில் தோ்தல் முறைகேடு குறித்து விசாரணை
சுவிட்சர்லாந்தில் புர்காவுக்குத் தடை: மீறினால் ரூ. 10,000 அபராதம்!
சுவிட்சர்லாந்து நாட்டில் பெண்கள் முகத்தை மூடியபடி புர்கா அணிந்து பொது வெளிகளில் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த விதிமுறை, புத்தாண்டு (ஜன. 1) முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
வழிபாட்டுத் தலங்கள், மசூதிகள், பிற புனித தலங்கள், விமானங்கள், தூதரக அலுவலகங்கள் உள்ளிட்டவைக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : பாலியல் வன்கொடுமை வழக்கை அரசியல் ஆக்குவது ஏன்? உயர்நீதிமன்றம்
சுவிட்சர்லாந்தில் புர்காவுக்கு தடை விதிப்பது தொடர்பான தீர்மானம் கடந்த 2021ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதற்கு முஸ்லிம் அமைப்புகள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருந்தது.
இந்த நிலையில், பல்வேறு மக்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இந்த விதிமுறையை சுவிட்சர்லாந்து அரசு அமலுக்கு கொண்டுவந்துள்ளது.
உடல்நிலைப் பிரச்னை மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக முகத்தை மூடிக் கொள்ளலாம் என்றும், தட்பவெப்பநிலை மற்றும் மத ரீதியாக முகத்தை மூடக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விதிமுறையை மீறுபவர்களுக்கு 1,000 சுவிஸ் பிராங்க்ஸ் (இந்திய மதிப்பில் 10,000 ரூபாய்) அபராதமாக விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே பிரான்ஸ், நெதர்லாந்து, இலங்கை, ஆஸ்திரியா, டென்மார்க் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் புர்காவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.