காஸாவில் கடந்த 24 மணிநேரத்தில் இஸ்ரேல் தாக்குதலுக்கு 59 பேர் பலி
காஸாவில் கடந்த 24 மணிநேரத்தில் இஸ்ரேல் நடத்திய நான்கு தாக்குதல்களில் 59 பேர் கொல்லப்பட்டனர்.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகள் கடந்த 24 மணி நேரத்தில் காஸா பகுதியில் குடும்பங்களைக் குறிவைத்து நான்கு தாக்குதல்களில் 59 பாலஸ்தீனியர்கள் பலியானார்கள். மேலும் 273 பேர் காயமடைந்தனர்.
காஸாவில் உள்ள மருத்துவ ஆதாரங்களின்படி, பாதிக்கப்பட்டவர்கள் பலர் இன்னும் அழிக்கப்பட்ட கட்டடங்களின் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.
அசாமில் ரோஹிங்கியா அகதிகள் தப்பியோட்டம்!
இடைவிடாத இஸ்ரேலிய தாக்குதல்கள் காரணமாக மருத்துவர்கள் மற்றும் மீட்புப் பணியாளர்கள் அவர்களை அடைய முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன், இந்தப் பகுதியில் கடந்த ஆண்டு அக்டோபா் 7-ஆம் தேதி முதல் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் பலியானோரின் எண்ணிக்கை 45,717-ஆக உயா்ந்துள்ளது.
காஸாவில் போா் நிறுத்தம் மேற்கொள்வதற்கான பேச்சுவாா்த்தையில் பங்கேற்பதற்காக இஸ்ரேல் பிரதிநிதிகள் கத்தாா் புறப்பட்ட பிறகும் அங்கு இஸ்ரேல் நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.