2047-க்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மேம்படுத்துங்கள்: குடியரசு துணைத் தலை...
தில்லியில் 1.55 கோடி வாக்காளர்கள் பதிவு!
தில்லி சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 1.55 கோடி வாக்காளர்கள் பதிவு செய்துள்ளதாகவும் இது கடந்த முறையை விட 1.09 சதவீதம் அதிகம் எனவும் தலைமைத் தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தில்லி தலைமைத் தேர்தல் அலுவலர் கூறியதாவது, இம்முறை தேர்தலில் 3,08,942 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். 1,41,613 பேர் நீக்கப்பட்டுள்ளனர். முடிவாக
சற்றும் எதிரபாராத வகையில் டிசம்பர் 16, 2024 முதல் கடந்த 20 நாள்களில் மட்டும் 5.1 லட்சம் வாக்காளர்கள் படிவம் -6 கோரி பதிவு செய்துள்ளனர். இந்திய தேர்தல் ஆணைய வழிகாட்டுதல்களின்படி புதிய வாக்காளர்களுக்கான விண்ணப்பம் கள ஆய்வு செய்து இறுதியாக்கப்பட்டுள்ளது. இதுவரை 1,55,24,858 வாக்காளர்கள் பதிவு செய்துள்ளனர்.
வாக்காளர் அடையாள அட்டையைப் பெறுவதற்காக முறைகேடான ஆவணங்கள் கொடுத்து பதிவு செய்த 24 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தில்லி ஆளும் கட்சி சமீபத்தில் அறிவித்த மகிலா சம்மான் என்ற உதவித்தொகை அறிவிப்பால், வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இத்திட்டத்துக்கு வாக்காளர் அட்டை அவசியம் எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | 'இந்தியா கேட்' பெயரை மாற்ற வேண்டும்: பிரதமர் மோடிக்கு கோரிக்கை!