வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் சரிதான்: தலைமைத் தேர்தல் ஆணையர்
Good Bad Ugly: `3 மாத இடைவெளியில் இரண்டு அஜித் படங்கள்' - குட் பேட் அக்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு
பொங்கல் பண்டிகைக்கு அஜித்தின் `விடாமுயற்சி' திரைப்படம் வெளியாவதாக முன்பு அறிவித்திருந்தனர்.
ஆனால், சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் பிற்போடப்படுவதாக லைகா நிறுவனம் கடந்த ஜனவரி 1-ம் தேதி அறிவித்திருந்தது.
`குட் பேட் அக்லி' திரைப்படமும் முன்பு பொங்கல் பண்டிக்கைக்கு வெளியாவதாக படக்குழு அறிவித்திருந்தார்கள். ஆனால், பிறகு அத்திரைப்படத்தின் ரிலீஸ் தேதியும் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது `குட் பேட் அக்லி' திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்திருக்கிறார்கள். ஏப்ரல் 10-ம் தேதி `குட் பேட் அக்லி' திரைப்படம் வெளியாகவிருக்கிறது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கிற இத்திரைப்படத்தில் அர்ஜூன் தாஸ், பிரசன்னா, சுனில் என பலரும் நடித்திருக்கிறார்கள். `கிரீடம்' திரைப்படத்திற்குப் பிறகு அஜித் நடிக்கும் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். பிற்போடப்பட்ட `விடாமுயற்சி' திரைப்படமும் கூடிய விரைவில் வெளியாகும் எனக் கூறப்பட்டு வருகிறது. அடுத்த 3 மாத இடைவெளிக்குள் அஜித்தின் மற்றொரு திரைப்படமான `குட் பேட் அக்லி' படமும் வெளியாகவிருக்கிறது.
ஏ.கே ஃபேன்ஸ் ஹாப்பி!
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...