செய்திகள் :

DMK:`அமைச்சர்கூட ஞானசேகரன் போட்டோ எடுத்துக்கிட்டதுக்கு திமுக எப்படி பொறுப்பாகும்?'- திவ்யா சத்யராஜ்

post image
அரசியலில் இல்லாவிட்டாலும் அதிரடி ஸ்டேட்மென்ட்களால் பரபரப்பாக்கக்கூடியவர் நடிகர் சத்யராஜின் மகளும் ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ்.

சமீபத்தில், அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்புணர்வு கொடூரத்தை எதிர்த்து சாட்டையால் அடித்துக்கொண்ட அண்ணாமலைக்கு 8 கேள்விகள் கேட்டு மீண்டும் ஒரு விவாதத்தைக் கிளப்பியிருந்தார். தனது ‘மகிழ்மதி’ இயக்கம் மூலம் தமிழ்நாடு மட்டுமல்லாது, வெளிமாநிலங்களிலும் பல்வேறு சேவைகளைச் செய்துவரும் திவ்யா சத்யராஜ், ஆரோக்கியமான சமூகம் உருவாக தொடர்ந்து விழிப்புணர்வூட்டி வருகிறார்.

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த கொடூரத்தைக் கண்டிக்காமல், அண்ணாமலையை கேள்வி எழுப்பியிருக்கிறீர்களே ஏன்? அரசியலுக்கு வரப்போறேன்... அரசியலுக்கு வரப்போறேன்’ என அடிக்கடி ரஜினி ஸ்டைலில் சொல்லிக்கிட்டிருக்கீங்க, ஏன் இன்னு வரல? உங்களோட விமர்சனங்கள், கருத்துகளுக்கு அப்பா சத்யராஜ் எந்தளவுக்கு சப்போர்ட்டிவ்வா இருக்கார்? அம்மா இப்போ எப்படியிருக்காங்க? என திவ்யா சத்யாரஜிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தேன்.

திவ்யா சத்யராஜ்

"இப்பவும் அதையேதான் சொல்றேன். இன்னும் 10 நாள்களில் எந்தக் கட்சியில சேரப்போறேங்கிறதை அறிவிச்சுடுவேன்” என எதிர்பார்ப்பை உருவாக்கும் விதமாக பேச ஆரம்பித்தார். “எனக்கு அரசியல் ரொம்பப் பிடிக்கும். அதனாலதான், என்னோட நிலைப்பாட்டையும் அடிக்கடி தெரிவிச்சிட்டிருக்கேன். ஆனா, அம்மாவுக்கு சில வருடங்களாக உடம்பு சரியில்லை. என்னோட க்ளினிக் பணிகள், அம்மாவை கவனிச்சுக்கிறதுன்னு பிஸியா போய்ட்டிருக்கு. அதனாலதான், உடனடியாக அரசியல்ல; கட்சியில சேரமுடியல. ஆனா, எப்போதும் அரசியல் கனவுகள் உள்ளுக்குள்ள சுழன்றுக்கிட்டேதான் இருக்கு. மக்கள் பணியாற்றணும்ங்கிறதுதான் என்னோட எதிர்கால திட்டம்.

ஏற்கெனவே, என்னை நிறைய கட்சிகள்ல சேரச்சொல்லி அழைப்பு விடுத்தாங்க. வேட்பாளராவும் நிக்கச் சொன்னாங்க. சாதி, மத பின்னணியைக் கொண்டிருந்ததால, அந்தக் கட்சிகள்ல நான் சேரல. நாம எல்லோரும் மனித இனம் மட்டும்தான். மனிதத்தை நேசிக்கிற சாதி, மத பாகுபாடில்லாத கட்சியில இணையணும்ங்கிறதுதான் விருப்பம். என்னோட அப்பா பெண்ணியவாதின்னு எல்லோருக்குமே தெரியும். அதனால, என்னோட விருப்பத்துக்கு சப்போர்ட்டாதானே இருப்பார்? நான் அரசியலுக்கு வர்றது மட்டுமில்ல போட்டியிட்டாலும் எனக்காக வந்து பிரசாரமும் செய்வார். அப்படியொரு பேரன்புக்கார அப்பா. அவருக்கு மகளா பிறந்தது எனக்குத்தான் பெருமை.

வசதியான வீட்டுப் பொண்ணுங்கிறதால எல்லோரும் எனக்கு உழைக்கத் தெரியாதுன்னு நினைக்கிறாங்க. அவங்க நினைக்கிறது ரொம்பத் தப்பு. நான் கடுமையான உழைப்பாளி. எனக்கு, இப்போ வயசு 31 ஆச்சு. என்னோட 19 வயசிலிருந்து உழைச்சிட்டிருக்கேன். 3,500 ரூபாய் சம்பளத்துக்கெல்லாம் வேலை பார்த்திருக்கேன். அப்பா, ஆரம்பத்துல வில்லனா நடிச்சிக்கிட்டிருந்தார். அம்மா ரோட்டோரத்துல சின்னதா ஒரு ஐஸ்கிரீம் கடை வெச்சிருந்தாங்க. பைக்ல வந்துதான் அப்பா அம்மாவை வீட்டுக்குக் கூட்டிக்கிட்டு போவாங்க. இப்படி, கஷ்டப்பட்டு உழைப்பாலதான் இந்த இடத்துக்கு வந்திருக்கோம்.

திவ்யா சத்யராஜ்

என்னையும் அண்ணாவையும் எளிமையான வாழ்க்கையை வாழத்தான் பெற்றோர் பழக்கியிருக்காங்க. எங்களால கார் இல்லாம சைக்கிள்லகூட போகமுடியும். எந்த சூழலிலும் வாழமுடியும். இப்பவும், நான் ஆட்டோவுல போவேன். சைக்கிள்ல போவேன். சாதாரண வாழ்க்கைதான் வாழுறோம். காலையில் எட்டு மணிக்கு ஆஃபிஸ் போனா, நைட்டு எட்டு மணிக்குத்தான் வீட்டுக்கு வருவேன். எப்பவும் வேலைதான். ஆனா, அரசியல்னு வந்துட்டா ரெண்டுத்துலயும் கவனம் செலுத்துவேன்" என நம்பிக்கையோடு பேசிய திவ்யா சத்யாராஜிடம், ‘அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த கொடூரத்தில் நீங்கள் திமுகவை கண்டிக்காமல், அண்ணாமலையிடம் ஏன் கேள்வி எழுப்பவேண்டும்?’ என உங்கள் மீதே விமர்சனங்கள் எழும்பியிருக்கிறதே?’ எனக் கேட்டபோது,

"பெண்களுக்கெதிரான எந்தக் குற்றமாக இருந்தாலும் கடுமையாக கண்டிக்கப்படவேண்டும்; தண்டிக்கப்படவேண்டும். எப்போதும் பாதிக்கப்பட்ட பெண்ணிற்காகத்தான் என் குரல் ஓங்கி ஒலிக்கும். அதில், எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நடந்த கொடூரம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஆனா, இந்தக் குற்றத்தில் ஈடுபட்ட நபரை திமுக கைது செய்துவிட்டதே? கைது செய்யாமல் காப்பாற்றிக் கொண்டிருந்தால் கோபப்படுவதில் ஒரு நியாயம் இருக்கும்.

வட இந்தியாவில் பெண்களுக்கெதிரான அத்தனை அட்டூழியங்கள் நடந்துட்டிருக்கு. உதாரணமா, மணிப்பூர் பாலியல் வன்கொடுமைகளையே எடுத்துக்கோங்க. ஆனா, அதையெல்லாம் எதிர்த்துக் குரல்கூட கொடுக்காம, இதுக்கு மட்டும் அண்ணாமலை அண்ணன் ஏன் சாட்டையால அடிச்சுக்கணும்? இவர் அடிச்சதைப் பார்த்துட்டு என்கூட கிரிக்கெட் விளையாடுற பக்கத்துவீட்டு குட்டிப்பையன்; என் ஃப்ரெண்டு அவங்க அப்பாக்கிட்டே சைக்கிள் கேட்டிருக்கான். வாங்கித்தர முடியாதுன்னு சொல்லிருக்கார். அதுக்கு என்கிட்டே வந்து, 'அக்கா அமேசான்ல ஒரு சாட்டையை ஆர்டர் போடு. வாங்கி அடிச்சுக்கிட்டாதான் அப்பா வாங்கித்தருவார்’ங்கிறான். அண்ணாமலை அண்ணா வீடியோவை அவன் பார்த்திருக்கான்.

திவ்யா சத்யராஜ்

வளரும் தலைமுறைக்கு அண்ணாமலை அண்ணா இதைத்தான் விதைக்க நினைக்கிறாரா? இதையே, முன்மாதிரியா எடுத்துக்கிட்டு எல்லோரும் பண்ண ஆரம்பிச்சுடுவாங்க. அதனாலதான், அண்ணாமலை அண்ணாக்கிட்டே 8 கேள்விகள் கேட்டேன்.

என் கேள்விகள்ல இருக்க நியாயத்தைப் புரிஞ்சுக்காம என்னையே சிலர் திட்றாங்க. அதுவும் வயசு வித்தியாசம் பார்க்காம திட்றாங்க. எல்லாத்தையும் நான் கவனிச்சுட்டுத்தான் இருக்கேன். எல்லா ஆட்சியிலும் பெண்களுக்கெதிரான குற்றங்கள் நடந்துட்டுதான் இருக்கு. அதுக்காக, ஒட்டுமொத்த திமுக ஆட்சியே சரியில்லைன்னு குற்றம் சொல்லக்கூடாது. திமுகதான் பெண்களுக்கு பாதுகாப்பான கட்சி. சாதி, மத பாகுபாடில்லாத ஆட்சி. 'புதுமைப்பெண் திட்டம்', 'சத்துணவு திட்டம்' எனக்கு ரொம்ப பிடிச்ச திட்டங்கள். இதுக்காக திமுகவை பாராட்டிக்கிட்டே இருக்கலாம்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பிரச்சனைல திமுக சரியான நடவடிக்கை எடுத்திருக்கிறதாதான் நான் பார்க்கிறேன். குற்றவாளியை கைது பண்ணினது மட்டுமில்லாம அவனோட பின்னணியை தோண்டி எடுத்து விசாரிச்சிட்டிருக்காங்க. எந்த விதத்திலும் அநீதி பக்கம் நிற்கல. அப்படி இருக்கும்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூட எடுத்த போட்டோவை பரப்பி விமர்சிக்கிறாங்க. என்கூடவும் உங்கக்கூடவும் ஒருத்தர் போட்டோ எடுத்துட்டு நாளைக்கு கொலை செய்தா, அதுக்கு நாம எப்படி குற்றவாளியா ஆகமுடியும்? நாம எப்படி பொறுப்பேற்றுக்க முடியும்? அதேமாதிரிதான், இந்தப் பிரச்னைல அமைச்சர் எப்படி பொறுப்பாவார்? திமுக எப்படி பொறுப்பாகும்?

நல்லா யோசிச்சுப் பார்த்துதான், இந்த பிரச்னைல நான் நியாயத்துப் பக்கம் நிற்கிறேன். மோடி, அண்ணாமலை மாதிரி திமுக வேடிக்கைப் பார்க்கல. எல்லாமே அதிரடிதான். மோடிக்கு யோகா, இந்தி, வெளிநாட்டு சுற்றுப்பயணம் மட்டும்தான் தெரியும். மக்கள் கஷ்டப்படுறது தெரியாது, கண்டுக்கவும் மாட்டார்" என்று வெடித்துப் பேசும் திவ்யா சத்யராஜிடம், அவரது அம்மா உடல்நலம் குறித்து கேட்டோம்.

அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் ஞானசேகரன்

"அம்மா இன்னும் கோமாவுலதான் இருக்காங்க. நான், இன்ஸ்டாவுல அம்மாவோட உடல்நிலைப் பற்றி போஸ்ட் போட்டத்துக்குக் காரணமே, எங்கிருந்தாவது டாக்டர்ஸ் போன் பண்ணி அம்மாவை குணப்படுத்திடலாம்னு சொல்வாங்கங்கிற நம்பிக்கைலதான். அதேமாதிரி, ஒரு நரம்பியல் நிபுணர் போன் பண்ணி மருந்துகள் இருக்கு. ட்ரை பண்ணிப் பார்க்கலாம்னு சொன்னது, இப்போ நம்பிக்கை கொடுத்திருக்கு. அம்மா நிச்சயம் மீண்டு வந்துடுவாங்க” என புதுத் தெம்போடு பேசும் திவ்யா சத்யராஜ் ஆரோக்கியமாக இருக்க டிப்ஸ்களையும் பகிர்ந்துகொள்கிறார்.

“வாழ்க்கைல ஆரோக்கியம்தான் ரொம்ப முக்கியம். ஆரோக்கியத்தைத் தவிர நாம எதுக்குமே கவலைப்படக்கூடாது. ஆரோக்கியமா இருக்கிறதுக்கு தேவையான சரியான உணவுகளையும் முறையான உடற்பயிற்சிகளையும் செய்யணும். ஒருநாளைக்கு அரைமணி நேரமாவது வாங்கிங் போகலாம். அப்படி, வாக்கிங் போறதுக்கு நேரமில்லைன்னா, நான் ஸ்கிப்பிங் பண்ணிடுவேன். பெண்களுக்கு அழகை விட ஆரோக்கியம்தான் முக்கியம்” என்கிறார் தனது ட்ரேட்மார்க் ஹெல்த்தி டிப்ஸ்களுடன்!

Ajith Kumar: "That’s racing..." - கார் ரேஸ் பயிற்சியின்போது அஜித் குமாருக்கு விபத்து

அஜித் குமார் ரேஸிங் டீம் துபாய்க்குச் சென்றிருக்கிறது.நடிப்பைத் தாண்டி ரேஸிங் களத்திலும் தற்போது அதிக கவனத்தைச் செலுத்தி வருகிறார் அஜித் குமார். புதியதாக `அஜித்குமார் ரேஸிங்' என்ற குழுவையும் கடந்தாண்ட... மேலும் பார்க்க

Sivakarthikeyan:``என்னுடைய தயாரிப்பில் உங்களின் முதல் இந்திப் படம் என அமீர் கான் சொன்னார்" - எஸ்.கே

சிவகார்த்திகேயன் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் படம், சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கும் படம் என வலுவான லைன் அப்களை தனது கையில் வைத்திருக்கிறார்.இதுமட்டுமல்ல `டான்' சிபி சக்ரவர்த்தி இயக்கத்தி... மேலும் பார்க்க

KH 237: அமெரிக்காவில் AI படிப்புடன் ஸ்கிரிப்ட் வொர்க்; ஆரம்பமாகும் அடுத்த அதிரடி

மணிரத்னத்தின் இயக்கத்தில் 'தக் லைஃப்' படத்தில் நடித்து வந்த கமல்ஹாசன், அந்த படத்தை முடித்து கொடுத்து விட்டு, ஒரு சில மாதங்களுக்கு முன்னர் வெளிநாடு பறந்தார். கடந்த நவம்பர் மாதத்தோடு 'தக் லைஃப்' படப்பிட... மேலும் பார்க்க

Sivakarthikeyan: ``சாதாரணமான ஒருவன் வளர்ச்சியை எட்டும்போது சிலர்தான் வரவேற்கிறார்கள்!'' - எஸ்.கே!

சிவகார்த்திகேயன் தற்போது சுதா கொங்கரா இயக்கும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இத்திரைப்படத்தில் எஸ்.கேவுடன் ஜெயம் ரவி, அதர்வா, ஶ்ரீ லீலா எனப் பலரும் நடிக்கிறார்கள். மற்றொரு பக்கம் முருகதாஸ் இயக்கும்... மேலும் பார்க்க

Madraskaaran: "என்ன எப்போதும் செகண்ட் ஹீரோவாகவே தேர்ந்தெடுக்குறாங்க..." - கலையரசன் ஆதங்கம்

எஸ் ஆர் புரொடக்ஷன் சார்பில் B.ஜகதீஸ் தயாரிப்பில், 'ரங்கோலி' பட இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகம், கலையரசன், நிஹாரிகா நடிப்பில், ஆக்சன் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் '... மேலும் பார்க்க