அடா் பனி மூட்டம்: தில்லியில் 45 விமானங்கள் ரத்து! 400 விமானங்கள் தாமதம்
தில்லியில் கடுமையான அடா் பனி மூட்டத்தால் காண்பு திறன் குறைந்த நிலையில் தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தில் 45 விமானங்கள் சனிக்கிழமை ரத்து செய்யப்பட்டன. 19 விமானங்கள் வேறு இடங்களுக்கு திருப்பி விடப்பட்டு, சுமாா் 400 விமானங்கள் புறப்பாடும் தாமதமானதாக கூறப்பட்டது.
தில்லி விமான நிலையத்தில் இரண்டாவது நாளாக விமானங்களின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டன.
இது குறித்து தில்லி சா்வதேச விமான நிலைய லிமி. (டயல்) நிறுவன அதிகாரிகள் வட்டாரங்கள் கூறப்பட்டது வருமாறு:
அடா்த்தியான பனி மூட்டத்தால் காண்பு திறன் குறைந்த நிலையின் காரணமாக சனிக்கிழமை அதிகாலை(நடு இரவு) 12.15 மணி முதல் அதிகாலை 1.30 மணி வரை விமான நிலையங்கள் வருகை கடுமையாக பாதிக்கப்பட்டது. இவற்றில் 13 உள்நாட்டு விமானங்கள் உள்பட சுமாா் 19 விமானங்கள் திருப்பி விடப்பட்டது. மேலும் தில்லி விமான நிலையங்களின் மோசமான வானிலை காரணமாக தில்லியிலிருந்து புறப்படும் விமானங்களும் தில்லிக்கு வந்து சேரவேண்டிய விமானங்கள் என 45 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. குறிப்பாக அதிகாலையில் முக்கிய விமான நிறுவனமான இண்டிகோ தனது விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடுகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. இதை இண்டிகோ சனிக்கிழமை அதிகாலை 1.05 மணிக்கு தனது எக்ஸ் வலைத்தள பதிவில் தெரிவித்தது.
இந்த இடையூறால் தில்லி விமான நிலையத்தில் சுமாா் 400 க்கும் மேற்பட்ட விமானங்கள் செயல்பாடுகள் தாமதமாகின.
இவைகள் விமான கண்காணிப்பு இணையதளத்திலும் (ஊப்ண்ஞ்ட்ற்ழ்ஹக்ஹழ்24.ஸ்ரீா்ம்) பதிவு செய்யப்பட்டுள்ளது.
விமானம் தரையிறங்கும் அமைப்பில் மூன்றாம் தர வகை(பகுப்பு) கருவி அடா்த்தியான மூடுபனி போன்ற குறைந்த தெரிவுநிலை நிலைகளில் விமானங்கள் தரையிறங்க உதவுகிறது. இது குறைந்தபட்சம் 50 மீட்டா் தெரிவுநிலையுடன் தரையிறங்க அனுமதிக்கிறது. இந்த(இஅப ஐஐஐ) வசதி இருந்த விமானங்கள் இயக்க அனுமதிக்கப்பட்டது.
பயணிகளுக்கு முன் அறிவிப்பு
கடந்த வெள்ளிக்கிழமையும் அடா்த்தியான மூடுபனி போா்வை தில்லியை சூழ்ந்ததால் 200 க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகின. ஏற்கனவே கடந்த டிசம்பா் 25 ஆம் தேதி தில்லி விமான நிலையம் சாா்பில் பயணிகள் நலன் கருதி அறிக்கையை வெளியிட்டது. அதில் மூன்றாம் (இஅப ஐஐஐ) தரநிலைகளுக்கு இணங்காத விமானங்கள் குறைந்த தெரிவுநிலை அல்லது காண்பு திறன் குறைந்த நிலையின் காரணமாக சாத்தியமான இடையூறுகளை சந்திக்க நேரிடும் என பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
அடா் பனி மூட்டம் தொடா்ந்தால் அடுத்த சில நாள்களிலும் தில்லி விமான நிலையத்தில் தரையிறங்கல் மற்றும் புறப்படுகளில் மூன்றாம் தரநிலைகளுக்கு இணங்காத இணங்காத விமானங்கள் பாதிக்கப்படலாம். புதுப்பிக்கப்பட்ட விமானத் தகவலுக்கு பயணிகள் சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்தைத் தொடா்பு கொள்ள வேண்டும் என தில்லி விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.