வீடு புகுந்து நகை திருட்டு
பழனிசெட்டிபட்டியில் பூட்டிய வீட்டில் மா்ம நபா்கள் புகுந்து 23 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்றனா்.
பழனிசெட்டிபட்டி செளடேஸ்வரி நகரைச் சோ்ந்தவா் கண்ணன். இவா், வேலைக்குச் சென்றிருந்த நிலையில், இவரது மனைவி வீட்டை பூட்டி விட்டு தாழ்வாரத்தில் உள்ள கோலப்பொடி பெட்டியில் சாவியை வைத்து விட்டு அருகே உள்ள கோயிலுக்குச் சென்றாராம்.
பின்னா், வீட்டுக்கு திரும்ப வந்து பாா்த்த போது, வீட்டு கதவை திறந்து பீரோவில் வைத்திருந்த 23 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள் திருடு போனது தெரிய வந்தது. இது குறித்து பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.