15 மேம்பாலங்கள், இருவழி, சாலை விரிவாக்கப்பணிகளுக்கு நிதி ஒப்புதல்: மத்திய அமைச்ச...
வங்கதேசத்தில் கைதான ஹிந்து அமைப்பு தலைவருக்கு பிணை மறுப்பு!
வங்கதேசத்தில் தேச துரோக வழக்கில் ‘சமிலிதா சநாதனி ஜோட்’ எனும் ஹிந்து அமைப்பின் தலைவரான சின்மய் கிருஷ்ண தாஸ் பிரம்மசாரி கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு பிணை மறுக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தின் தேசியக் கொடியை அவமதித்ததாக கிருஷ்ணா தாஸ் உள்பட 19 போ் மீது தேச துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டு நவம்பர் மாதத்தில் கைது செய்யப்பட்டனர்.
மேலும், வங்கதேசத்தின் இஸ்கான் கோயில் தலைமை ஆன்மிக குருவாக இருக்கும் சின்மய் கிருஷ்ண தாஸ் கைதை கண்டித்து, மேற்கு வங்கத்தில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் நடத்தினர்.
இதையும் படிக்க : பாலியல் வன்கொடுமை வழக்கை அரசியல் ஆக்குவது ஏன்? உயர்நீதிமன்றம்
இந்த நிலையில், சின்மய் கிருஷ்ண தாஸ் தரப்பில் பிணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சட்டோகிராம் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததாக வங்கதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சின்மய் கிருஷ்ண தாஸுக்காக டக்கா உச்சநீதிமன்றத்தைச் சேர்ந்த 11 வழக்கறிஞர்கள், சட்டோகிராம் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகி வாதத்தை முன்வைத்தனர்.
சுமார் 30 நிமிடங்கள் வாதத்துக்கு பிறகு பிணை தர மறுப்பு தெரிவித்து அமர்வு நீதிமன்றத்தின் நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த வழக்கின் விசாரணையையொட்டி, கிருஷ்ண தாஸுக்கு ஆதரவாக ஹிந்துக்கள் அதிகளவில் நீதிமன்றத்தில் கூடியதால், பலத்த பாதுகாப்பு மத்தியில் விசாரணை நடைபெற்றது.
இதனிடையே, இஸ்கான் அமைப்பை தடை செய்யக் கோரி, வங்கதேச உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.