Ambani: அமெரிக்க அதிபராக ட்ரம்ப்; தொடக்க விழாவில் அம்பானி குடும்பம்! - வைரலாகும்...
டிரம்ப் ஹோட்டல் வாசலில் வெடித்த டெஸ்லா சைபர் டிரக்: ஒருவர் பலி!
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்புக்கு சொந்தமான ஹோட்டல் வாசலில், எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனத்தின் சைபர் டிரக் வெடித்துச் சிதறியுள்ளது.
புத்தாண்டு அன்று நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் ஒருவர் பலியான நிலையில், 7 பேர் காயமடைந்துள்ளனர்.
இதையும் படிக்க : வங்கதேசத்தில் கைதான ஹிந்து அமைப்பு தலைவருக்கு பிணை மறுப்பு!
நெவாடா மாகாணத்தில் உள்ள லாஸ் வேகாஸ் நகரில் டொனால்டு டிரம்புக்கு சொந்தமான ஹோட்டல் உள்ளது. இந்த ஹோட்டலுக்கு வெளியே டெஸ்லா சைபர் டிரக் எனப்படும் கார் நிறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில், புத்தாண்டு நாளாக புதன்கிழமை திடீரென்று இந்த சைபர் டிரக் வெடித்துச் சிதறியது. இந்த சம்பவத்தில் ஒருவர் பலியான நிலையில், 7 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக, லூசியானா மாகாணம், நியூ ஆா்லியன்ஸ் நகரில் புத்தாண்டை கொண்டாடிக் கொண்டிருந்த கூட்டத்தினா் மீது காரை ஏற்றி மா்ம நபா் நடத்திய தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். 35-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
அந்த நபா் ஓட்டி வந்த காரில் ஐஎஸ் கொடி மற்றும் பல்வேறு பொருள்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது.
இந்த நிலையில், நியூ ஆா்லியன்ஸில் நடந்ததை போன்று, லாஸ் வேகாஸில் சைபர் டிரக் வெடித்தது தீவிரவாதிகளின் சதிச் செயலாக இருக்கக் கூடும் என்று சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இரு சம்பவங்களுக்கும் இடையே ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில், இரண்டுக்கும் தொடர்பு இருக்க வாய்ப்பில்லை என்று பாதுகாப்பு அதிகாரிகள் நம்புவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், இரண்டு சம்பவங்கள் குறித்தும் தொடர் விசாரணைகள் நடைபெற்று வருவதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.