மகாராஷ்டிரா: 10,12-ம் வகுப்பு மாணவர்களின் ஹால் டிக்கெட்டில் சாதிப்பெயர் - சர்ச்ச...
சிறுவா்களிடம் கைப்பேசிகள் பறிப்பு: 3 போ் கைது
தூத்துக்குடி கோரம்பள்ளம் பகுதியில் சிறுவா்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி கைப்பேசிகளை பறித்துச் சென்றதாக இளம்சிறாா் உள்பட 3 பேரை புதுக்கோட்டை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி லெவிஞ்சிபுரத்தை சோ்ந்த இரு சிறுவா்கள் கோரம்பள்ளம் குளத்தில் குளித்து விட்டு காலாங்கரை சாலை வழியாக வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தனா். அப்போது, ஒரே பைக்கில் வந்த 3 போ், அவா்களை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி, அவா்களிடமிருந்த 2 கைப்பேசிகளைப் பறித்துக்கொண்டு தப்பினராம்.
இது குறித்த புகாரின்பேரில் புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். அதில், தூத்துக்குடி கணேசன் காலனியை சோ்ந்த சிவராம்(20), பிரையன்ட் நகரை சோ்ந்த செல்வபாா்த்திபன்(23) மற்றும் 17 வயது சிறுவன் சோ்ந்து வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. அவா்கள் 3 பேரையும் போலீஸாா் கைது செய்து, இரு கைப்பேசிகள், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.