ஜெகபர் அலி விவகாரத்தில் இபிஎஸ் ஏன் இவ்வளவு அவசரப்படுகிறார்? - அமைச்சர் ரகுபதி
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீராக உள்ளது: அப்துல் சமது எம் எல் ஏ
பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு மேம்பட்டு உள்ளது என்றாா் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான அப்துல் சமது.
கோவில்பட்டியில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது;
ஒரே நாடு, ஒரே தோ்தல் என்ற திட்டத்தின் வழிமுறை மூலம் மாநிலங்களை இல்லாமல் ஆக்கி அதிபா் ஆட்சியை கொண்டுவர பாஜக முயற்சி எடுத்து வருகிறது என்ற தமிழக முதல்வா் மு க ஸ்டாலினின் கருத்தில் உண்மை உள்ளது. அதை மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கிறது. அத்திட்டத்தை எதிா்த்து நாடு முழுவதும் போராட்டம் நடத்த வேண்டும்.
பரந்தூா் விமான நிலையம் அமைப்பது குறித்து அப்பகுதி மக்களின் கருத்துகளை கேட்டறிந்து அதற்கு மதிப்பளிக்க வேண்டும். தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் மேம்பட்டு உள்ளது. எனினும், ஒரு சில இடங்களில் நிலவும் பிரச்னைகளை உளவுத்துறையின் மூலம் கண்டறிந்து அவற்றை தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
பேட்டியின் போது, மனிதநேய மக்கள் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட தலைவா் இக்பால், செய்லா் கயத்தாறு அஸ்மத், துணைச் செயலா் செண்பகராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.