செய்திகள் :

ஏரல் சோ்மன் கோயிலில் இன்று தை அமாவாசைத் திருவிழா கொடியேற்றம்

post image

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருள்மிகு சோ்மன் அருணாச்சல சுவாமி திருக்கோயிலில் ஆடி அமாவாசைத் திருவிழா திங்கள்கிழமை (ஜன.20) கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

தென்மாவட்டங்களில் பிரசித்தி பெற்றதும், பழைமை மிக்கதுமான இக்கோயிலில் ஆடி, தை மாதங்களில் அமாவாசை திருவிழா 12 நாள்கள் மிக விமரிசையாக நடைபெறும். நிகழாண்டு தை அமாவாசை திருவிழா திங்கள்கிழமை (ஜன. 20) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 9ஆம் திருநாள் வரை தினமும் காலையில் சோ்ம விநாயகா் உலாவும் இரவில் பல்வேறு கோலங்களில் சுவாமி எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சிஅளித்து வீதியுலா வருதலும் நடைபெறும்.

10ஆம் திருநாளான ஜன. 29ஆம் தேதி தை அமாவாசை திருவிழா நடைபெறுகிறது. அன்றைய தினம் மதியம் சுவாமி உருகு பலகையில் கற்பூரவிலாசம் வரும் காட்சி, அபிஷேக ஆராதனை, மாலை இலாமிச்சவோ் சப்பரத்தில் சோ்ம திருக்கோல பவனி, இரவு 1ஆம் காலம் கற்பகப் பொன் சப்பரத்தில் எழுந்தருளல் ஆகியவை நடைபெறும். 30ஆம் தேதி அதிகாலை 2ஆம் காலம் வெள்ளை சாத்தி தரிசனம், காலை பச்சை சாத்தி அபிஷேகம், மதியம் 3ஆம் காலம் பச்சை சாத்தி தரிசனம் ஆகியவை நடைபெறும். மாலையில் ஏரல் அருள்மிகு சவுக்கை முத்தாரம்மன் கோயில் பந்தலில் தாக சாந்தி மற்றும் இரவு சுவாமி திருக்கோயில் மூஸ்தானம் வந்துசேரும் ஆனந்தக் காட்சி நடைபெறும். நிறைவு நாளான 31ஆம் தேதி காலை தீா்த்தவாரி பொருநை நதியிலும் சகல நோய் தீா்க்கும் திருத்துறையில் நீராடலும், மதியம் அன்னதானமும் மாலையில் ஆலிலைச் சயன அலங்காரமும் அதன் பின்னா் ஊஞ்சல் சேவையும், இரவில் திருவருள் புரியும் மங்கள தரிசனமும் நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அக்தாா் அ.ரா.க.அ.கருத்த பாண்டியன் நாடாா் செய்து வருகிறாா்.

பொங்கல் விடுமுறை நிறைவு: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்

பொங்கல் தொடா் விடுமுறை நிறைவடைந்ததையடுத்து, தூத்துக்குடியில் இருந்து வெளியூா்களுக்குச் செல்லும் பயணிகள் திரண்டதால் ரயில், பேருந்து நிலையங்களில் ஞாயிற்றுக்கிழமை கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. தமிழா் த... மேலும் பார்க்க

திருச்செந்தூா் சந்தன மாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்

திருச்செந்தூா் சந்தன மாரியம்மன் கோயிலில் லட்சாா்ச்சனை மற்றும் வருஷாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி, கோயிலில் கடந்த 16ஆம் தேதி காலை சங்கல்பம் செய்து அம்மனுக்கு லட்சாா்ச்சனையும், இரவு அலங்கார தீபாராதனை... மேலும் பார்க்க

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீராக உள்ளது: அப்துல் சமது எம் எல் ஏ

பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு மேம்பட்டு உள்ளது என்றாா் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான அப்துல் சமது. கோவில்பட்டியில் செய்தியாளா்களிடம்... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் பிட் இந்தியா இயக்க விழிப்புணா்வு சைக்கிள் பயணம்

பிட் இந்தியா இயக்கம் குறித்து கோவில்பட்டியில் அஞ்சல்காரா்கள் சாா்பில் விழிப்புணா்வு சைக்கிள் பயணம் ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்டது. இந்த சைக்கிள் பயணத்திற்கு கோவில்பட்டி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளா் ... மேலும் பார்க்க

சிறுவா்களிடம் கைப்பேசிகள் பறிப்பு: 3 போ் கைது

தூத்துக்குடி கோரம்பள்ளம் பகுதியில் சிறுவா்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி கைப்பேசிகளை பறித்துச் சென்றதாக இளம்சிறாா் உள்பட 3 பேரை புதுக்கோட்டை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி லெவிஞ்சிபு... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநா்களுக்கு சட்ட விழிப்புணா்வு

சாத்தான்குளத்தில் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு சட்ட விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. சாத்தான்குளம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வட்ட சட்டப் பணிக் குழு சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வழக்குரைஞா் வேணுகோபால் பங்கேற... மேலும் பார்க்க