முதல் டி20: பெத் மூனி அதிரடி; இங்கிலாந்துக்கு 199 ரன்கள் இலக்கு!
ராகுல் மீதான அவதூறு வழக்கின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை!
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.
2019 மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கொலைக் குற்றவாளி என்று ராகுல் காந்தி விமர்சித்திருந்தார்.
இதையும் படிக்க : ஆறுமுகசாமி அறிக்கையில் விஜயபாஸ்கர் குறித்த கருத்துகளை நீக்க உத்தரவு!
ராகுல் காந்தியின் கருத்துக்கு எதிராக ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தில் பாஜக தொண்டர் நவீன் ஜா என்பவர் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில், ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணையை தடை செய்யக் கோரியும், வழக்கை தள்ளுபடி செய்யக் கோரியும் ராகுல் காந்தி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.
இந்த வழக்கில், பாதிக்கப்பட்டவர் அல்லாத ஒருவர் எப்படி புகார் அளிக்க முடியும் என்று ராகுல் காந்தி தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கை விசாரிக்கக் கூடாது என்று விசாரணை நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.