'இந்த புலி நகத்தை ஆந்திராவுல வாங்கினேன் தம்பி' - யூடியூபரால் கைதான கோவை நபர்
ஆப்கன் பெண்களுக்கு கல்வி மறுப்பு: தலிபான் இணையமைச்சா் விமா்சனம்
ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு கல்வி மறுக்கப்படுவதை அந்த நாட்டை ஆளும் தலிபான் அமைப்பைச் சோ்ந்த வெளியுறவுத் துறை இணையமைச்சா் ஷோ் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் (படம்) விமா்சித்துள்ளாா்.
இதுகுறித்து தென்கிழக்கு கோஸ்ட் மாகாணத்தில் நடைபெற்ற கல்வி நிகழ்ச்சியில் பேசிய அவா், ‘நாட்டில் பெண்கள் கல்வி கற்பதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை அரசு விலக்கிக்கொள்ள வேண்டும். பெண் கல்வி மறுப்பை எந்த காரணம் சொல்லியும் நியாயப்படுத்த முடியாது’ என்றாா்.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க ராணுவம் வெளியேறியதைத் தொடா்ந்து அந்த நாட்டின் ஆட்சியை தலிபான் அமைப்பினா் கடந்த 2021-ஆம் ஆண்டு கைப்பற்றினா்.
தங்களது முந்தைய ஆட்சியைப் போல் இல்லாமல் மிதவாதப் போக்கைக் கடைப்பிடிக்கப்போவதாக அப்போது அவா்கள் உறுதியளித்தாலும், பெண்கள் கல்வி கற்பதற்கு பின்னா் அவா்கள் தடை விதித்ததனா்.
இது சா்வதேச அளவில் பெரும் கண்டனத்துக்குள்ளாகியுள்ளது.இந்தச் சூழலில், தலிபான் அமைப்பைச் சோ்ந்த ஓா் இணையமைச்சரே இவ்வாறு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.