செய்திகள் :

'இந்த புலி நகத்தை ஆந்திராவுல வாங்கினேன் தம்பி' - யூடியூபரால் கைதான கோவை நபர்

post image

வைரல் கன்டென்ட்களை தரும் யூடியூபர்களை விட சர்ச்சைக்குரிய கன்டென்ட்களால் சிக்கலில் விடும் யூடியூபர்கள் அதிகரித்து வருகிறார்கள். கோவை மாவட்டத்தில் ‘கோயம்புத்தூர் மாப்பிள்ளை’ என்ற பெயரில் ஒரு இளைஞர் யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் கோவை தொடர்பான வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.

கோவை

அவர் சமீபத்தில் வெளியிட்ட வீடியோ சர்ச்சையாகியுள்ளது. அதில் ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரிடம் பேட்டி எடுத்திருந்தார்.

அவர் தன்னுடைய கழுத்தில் புலி நகத்தால் செய்யப்பட்ட செயின் அணிந்திருந்தார். இதுகுறித்து பாலகிருஷ்ணன், “பொதுவெளியில் சொல்லக் கூடாது. இருந்தாலும் சொல்கிறேன். இந்த புலி நகத்தை ஆந்திராவில் இருந்து வாங்கினேன். எனக்கு வேட்டைக்கு செல்ல ஆசைதான்.

யூடியூபருக்கு பேட்டி

இருந்தாலும் வேட்டைக்கு செல்லவில்லை.” என்று கூறியிருந்தார். இந்த வீடியோ வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணையில் இறங்கினார்கள். பாலகிருஷ்ணனின் வீட்டை சோதனை செய்தனர்.

சோதனையின் போது அவர் வெளியூர் சென்றிருந்தார். சோதனையில் ஒரு புள்ளிமானுடைய கொம்பின் துண்டுகள் கண்டறியப்பட்டன. இதுதொடர்பாக வனத்துறையினர் பாலகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கைது

அவரிடம் இருந்து செயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. செயின் மற்றும் மான் கொம்பு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. அந்த அறிக்கை கிடைத்ததும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று வனத்துறை கூறியுள்ளது.

'காஸா 3; இஸ்ரேல் 90' - பணய கைதிகள் விடுவிப்பு... இன்னும் எத்தனை நாள்கள் தொடரும் இந்த போர்நிறுத்தம்?

கடந்த வாரம், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்துகொண்டதை அடுத்து, தற்போது இரு நாடுகளும் தாங்கள் பிடித்து வைத்திருக்கும் பணய கைதிகளை கொஞ்சம் கொஞ்சமாக விடுவிக்க தொடங்கியிருக்கிறது. இ... மேலும் பார்க்க

TVK: ``அரிட்டாபட்டி நிலைபாட்டைத் தானே திமுக பரந்தூரிலும் எடுத்திருக்க வேண்டும்" - விஜய் ஆவேசம்

மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் வருகிறது என்றதும் தமிழ் வரலாற்றை அழிக்கும் முயற்சி என அரசியல் ரீதியாக மத்திய அரசை எதிர்க்கும் ஆளும் தி.மு.க, பரந்தூரில் மூன்றாண்டுகளாக மக்களின் போராட்ட குரல்கள... மேலும் பார்க்க

Trump: 'நான் அதிபரான முதல் நாளில்...' - ட்ரம்ப் அடுக்கிய 11 விஷயங்கள் என்னென்ன? - அதை செய்வாரா?

அமெரிக்க அதிபராக இன்று பொறுப்பேற்க உள்ளார் ட்ரம்ப். ட்ரம்ப் நான் பதவியேற்ற முதல் நாளில் 'இதை செய்வேன்'...'அதை செய்வேன்' என்று அவ்வப்போது கூறிவந்தார். அப்படி அவர் பதவியேற்ற முதல் நாளில் செய்யப்போவதாகக்... மேலும் பார்க்க

கனிமவளக் கொள்ளை:``புகார் அளித்தவரைக் காட்டிக் கொடுத்து..." - திமுக அரசை சாடும் எடப்பாடி பழனிசாமி

புதுக்கோட்டை மாவட்டம் வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ஒன்றிய அ.தி.மு.க கவுன்சிலரான ஜகபர் அலி, சமூக ஆர்வலர். திருமயம் தாலுகாவில் தொடர்ந்து கனிம வளக் கொள்ளை நடப்பதாக மாவட்ட நிர்வாகத்துக்கு ஆதாரங்... மேலும் பார்க்க

Live: பரந்தூர் புறப்பட்ட விஜய்... 8 கிலோ மீட்டர் முன்னரே தடுத்து நிறுத்தப்படும் தொண்டர்கள்!

`தி.மு.க-வுக்கு எந்த நெருக்கடியையும் கொடுக்காது'ஆர்.எஸ்.பாரதிதி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி,``விஜய் பரந்தூர் செல்வதால் அது தி.மு.க-வுக்கு எந்த நெருக்கடியையும் கொடுக்காது. அமைச்சர் தென்னரசு ப... மேலும் பார்க்க