செய்திகள் :

கனிமவளக் கொள்ளை:``புகார் அளித்தவரைக் காட்டிக் கொடுத்து..." - திமுக அரசை சாடும் எடப்பாடி பழனிசாமி

post image
புதுக்கோட்டை மாவட்டம் வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ஒன்றிய அ.தி.மு.க கவுன்சிலரான ஜகபர் அலி, சமூக ஆர்வலர். திருமயம் தாலுகாவில் தொடர்ந்து கனிம வளக் கொள்ளை நடப்பதாக மாவட்ட நிர்வாகத்துக்கு ஆதாரங்களுடன் பலமுறை மனு கொடுத்து, அதற்கு எதிராகப் போராடி வந்தார்.

இந்த நிலையில், கடந்த 10-ம் தேதி, புதுக்கோட்டை கோட்டாட்சியரிடம் சிலக் குவாரிகளின் பெயரைக் குறிப்பிட்டு, ஆதாரங்களுடன் பலநூறுக் கோடிக்கான கனிமவளக் கொள்ளை நடந்திருக்கிறது எனக் குறிப்பிட்டு மனு அளித்ததாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, கடந்த 17-ம் தேதி வெள்ளிக்கிழமை ஜகபர் அலி, லாரி மோதி உயிரிழந்தார்.

ஜகபர் அலி

இது தொடர்பாக காவல்துறை 4 பேரைக் கைது செய்திருக்கிறது. இது தொடர்பாக அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தன் எக்ஸ் பக்கத்தில், ``புதுக்கோட்டை தெற்கு மாவட்டம் திருமயம் தெற்கு ஒன்றிய சிறுபான்மை பிரிவு செயலாளரும், முன்னாள் அ.இ.அ.தி.மு.க ஒன்றியக் குழு உறுப்பினர், புதுக்கோட்டை மாவட்ட அமைச்சூர் கபடி கழக செயலாளரும், சமூக ஆர்வலருமான திரு.ஜெபகர் அலி அவர்கள், சமூக விரோதிகளால் லாரி ஏற்றிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

கனிமவளக் கொள்ளை தொடர்பாக, திருமயம் வட்டாட்சியரைச் சந்தித்து புகார் செய்து, 15 நாட்களுக்கும் மேலாக ஆகியும், மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பலமுறை புகார் செய்தும், மாவட்ட ஆட்சியரிடமே புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தற்போது அவரை சமூக விரோதிகள் லாரி ஏற்று படு கொலை செய்திருக்கிறார்கள் என்ற செய்தி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்தக் கொலைக் குற்றத்தின் பின்னணியில் உள்ள உண்மையான குற்றவாளிகள், கனிமவளக் கொள்ளையர்களை விட்டுவிட்டு, லாரி டிரைவர் உள்ளிட்டவர்களை மட்டும் கைது செய்து வழக்கைத் திசை திருப்பி வருகிறது இந்த விடியா அரசு.

எடப்பாடி பழனிசாமி

கனிமவளக் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், புகார் அளித்தவரைக் காட்டிக் கொடுத்து, மிக மிக மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது திமுக அரசு. ஜெகபர் அலி அவர்கள் இறப்புக்கு நீதி வேண்டும். கனிமவளக் கொள்ளையர்கள் மட்டுமின்றி, அவர் கொடுத்த புகார்களின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்த அனைத்து அதிகாரிகளும் அவரது மரணத்திற்குப் பொறுப்பு. உரிய விசாரணை நடத்தி, அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

TVK: ``அரிட்டாபட்டி நிலைபாட்டைத் தானே திமுக பரந்தூரிலும் எடுத்திருக்க வேண்டும்" - விஜய் ஆவேசம்

மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் வருகிறது என்றதும் தமிழ் வரலாற்றை அழிக்கும் முயற்சி என அரசியல் ரீதியாக மத்திய அரசை எதிர்க்கும் ஆளும் தி.மு.க, பரந்தூரில் மூன்றாண்டுகளாக மக்களின் போராட்ட குரல்கள... மேலும் பார்க்க

'இந்த புலி நகத்தை ஆந்திராவுல வாங்கினேன் தம்பி' - யூடியூபரால் கைதான கோவை நபர்

வைரல் கன்டென்ட்களை தரும் யூடியூபர்களை விட சர்ச்சைக்குரிய கன்டென்ட்களால் சிக்கலில் விடும் யூடியூபர்கள் அதிகரித்து வருகிறார்கள். கோவை மாவட்டத்தில் ‘கோயம்புத்தூர் மாப்பிள்ளை’ என்ற பெயரில் ஒரு இளைஞர் யூடி... மேலும் பார்க்க

Trump: 'நான் அதிபரான முதல் நாளில்...' - ட்ரம்ப் அடுக்கிய 11 விஷயங்கள் என்னென்ன? - அதை செய்வாரா?

அமெரிக்க அதிபராக இன்று பொறுப்பேற்க உள்ளார் ட்ரம்ப். ட்ரம்ப் நான் பதவியேற்ற முதல் நாளில் 'இதை செய்வேன்'...'அதை செய்வேன்' என்று அவ்வப்போது கூறிவந்தார். அப்படி அவர் பதவியேற்ற முதல் நாளில் செய்யப்போவதாகக்... மேலும் பார்க்க

Live: பரந்தூர் புறப்பட்ட விஜய்... 8 கிலோ மீட்டர் முன்னரே தடுத்து நிறுத்தப்படும் தொண்டர்கள்!

`தி.மு.க-வுக்கு எந்த நெருக்கடியையும் கொடுக்காது'ஆர்.எஸ்.பாரதிதி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி,``விஜய் பரந்தூர் செல்வதால் அது தி.மு.க-வுக்கு எந்த நெருக்கடியையும் கொடுக்காது. அமைச்சர் தென்னரசு ப... மேலும் பார்க்க

பரந்தூரில் மக்களை சந்திக்கும் விஜய்; அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்ன பதில்

தமிழகத்தின் பொருளாதாரம், நிதி மேலாண்மை, மற்றும் கடனைத் திருப்பி செலுத்தும் திறன் குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்திருந்தார்.இதற்குப் பதிலளிக்கும் விதமாக, விருதுநகர் ... மேலும் பார்க்க

வார்த்தை தவறிய STALIN, நிறைவேற்றாத வாக்குறுதிகள்! | Elangovan Explains

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,சுமார் 505 வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சி பொறுப்புக்கு வந்தது திமுக. ஆனால் அதில் ஒரு சில மட்டுமே நிறைவேற்றியுள்ளனர். பெரும்பாலான வாக்குறுதிகள் காற்றில் பறந்த படி உள்ளன. என்... மேலும் பார்க்க