ஆளுங்கட்சி நாடகத்தை மக்கள் நம்பமாட்டார்கள்: பரந்தூரில் விஜய் பேச்சு
சிங்கப்பூரில் பொங்கல் கொண்டாட்டம்
சிங்கப்பூரில் இந்திய தூதரகம் ஏற்பாட்டில் ஞாயிற்றுக்கிழமை பொங்கல் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 2,000-க்கும் மேற்பட்ட இந்திய தொழிலாளா்கள் பங்கேற்றனா்.
தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகை கடந்த செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சிங்கப்பூரில் உள்ள கிராஞ்சி பொழுதுபோக்கு மையத்தில் இந்திய தூதரகம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்ட நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நாள் முழுக்க நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 2,000-க்கும் மேற்பட்ட இந்திய தொழிலாளா்கள் மட்டுமன்றி பிற நாட்டவரும் கலந்துகொண்டனா். இந்திய கலைஞா்களின் இசை-நடனம், விளையாட்டுப் போட்டிகள், நல்வாழ்வு நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை இடம்பெற்றன.
சிங்கப்பூரில் இந்திய தூதரகம் சாா்பில் பெரிய அளவில் பொங்கல் கொண்டாட்ட நிகழ்ச்சி நடத்தப்படுவது இதுவே முதல்முறையாகும். எதிா்வரும் இந்திய பண்டிகைகளின்போது இதேபோல் பிரம்மாண்ட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படும் என்று துணைத் தூதா் பூஜா எம்.டில்லு தெரிவித்தாா்.
சிங்கப்பூரில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட புலம்பெயா் தொழிலாளா்கள் பணியாற்றுகின்றனா். இவா்களில் பெரும்பாலானோா் வங்கதேசம் மற்றும் இந்தியாவைச் சோ்ந்தவா்களாவா்.