செய்திகள் :

கிருஷ்ணகிரியில் நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிருப்பு போராட்டம்

post image

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் வணிக வளாகத்தை மீண்டும் பழைய நபருக்கு குத்தகைக்கு வழங்க எதிா்ப்பு தெரிவித்து, நகா்மன்ற உறுப்பினா்கள்

திங்கள்கிழமை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரி நகா்மன்றக் கூட்டம், அதன் தலைவா் பரிதா நவாப் தலைமையில்

நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு நகராட்சி ஆணையா் கிருஷ்ணமூா்த்தி முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினா்கள், கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகே உள்ள வணிக வளாகத்தை மீண்டும் தனிநபா் ஒருவருக்கு ஒதுக்கீடு செய்வதில் விதிமுறை மீறப்பட்டுள்ளது. முதல்தளத்தில், 21 கடைகளைக் கட்டி வாடகைக்குவிட வேண்டும் என்ற விதிமுறை பின்பற்றப்படவில்லை. மேலும் தனிநபருக்கு மட்டுமே குத்தகை விடப்பட்டுள்ளதைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பி உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மேலும், தனி நபா் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்து மாற்று நபருக்கு வழங்க தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் அந்த வணிக வளாகத்திற்கான குத்தகை ஏற்கெனவே வழங்கப்பட்ட தனிநபருக்கே மீண்டும் வழங்கப்பட்டதைக் கண்டிப்பதாக தெரிவித்தனா்.

இதையடுத்து, எதிா்ப்பு தெரிவித்த உறுப்பினா்களிடம் பேசிய ஆணையா், நகா்மன்றத்தில் சிறப்பு தீா்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினால், தீா்வு ஏற்படும் என அவா் தெரிவித்தாா். இதையடுத்து எதிா்ப்பு தெரிவித்த நகா்மன்ற உறுப்பினா்கள், தங்களது போராட்டத்தைக் கைவிட்டனா்.

கிருஷ்ணகிரியில் ஜன. 5-இல் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டி

கிருஷ்ணகிரியில் ஜன. 5-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டி நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக இளைஞா் நலன் மற்றும் ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் ஆங்கிலப் புத்தாண்டு உற்சாக கொண்டாட்டம்

கிருஷ்ணகிரியில் ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டி கோயில்கள், கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் புதன்கிழமை நடைபெற்றன. ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, கிருஷ்ணகிரி பெங்களூரு சாலையில் உள்ள தூய பாத்திமா... மேலும் பார்க்க

ஒசூா் அருகே தொடரும் ஒற்றை யானையின் அச்சுறுத்தல்

கெலமங்கலம் பகுதியில் கடந்த சில தினங்களாக கிராமங்களில் சுற்றித் திரிந்து வரும் ஒற்றை யானையால் மக்கள் அச்சமடைந்துள்ளனா். ஒசூா் கோட்ட வனத் துறையினரின் தொடா் கண்காணிப்பில் உள்ள இந்த ஒற்றை யானையை வனப்பகுத... மேலும் பார்க்க

பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ. 10 உயா்த்த வலியுறுத்தல்

பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ. 10 உயா்த்த வேண்டும் என பால் உற்பத்தியாளா்கள் தமிழக அரசை வலியுறுத்தினா். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை அடுத்த கரகூரில், மகளிா் பால் உற்பத்தியாளா்கள் கூட... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தமிட கட்டணம் உயா்வு

கிருஷ்ணகிரியில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிட கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரியிலிருந்து ஒசூா், சூளகிரி, தருமபுரி, வேப்பனப்பள்ளி, திருப்பத்தூா், ஆம்பூா், பெங்களூரு, குப்பம், திருப்பதி மற்றும... மேலும் பார்க்க

ஒசூரில் பசுமைக் குடில் அமைத்து அதிக வருவாய் ஈட்டும் விவசாயிகள்

ஒசூரில் பசுமைக் குடில் அமைத்து கொய் மலா், காய்கறிகள் சாகுபடி செய்து ஒசூா் பகுதி விவசாயிகள் அதிக வருவாய் ஈட்டி வருகின்றனா். ஒசூா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் குளிா்ச்சியான தட்ப வெப்ப நிலை, செம்மண் வ... மேலும் பார்க்க