விருதுநகா் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 6 போ் உயிரிழப்பு
பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ. 10 உயா்த்த வலியுறுத்தல்
பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ. 10 உயா்த்த வேண்டும் என பால் உற்பத்தியாளா்கள் தமிழக அரசை வலியுறுத்தினா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை அடுத்த கரகூரில், மகளிா் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம், புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு அந்த சங்கத்தின் முன்னாள் தலைவா் மகேஸ்வரி ராமகவுண்டா் தலைமை வகித்தாா். செயலாளா் சொா்ணலதா, தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் ராமகவுண்டா் ஆகியோா் பங்கேற்றனா்.
லிட்டா் பாலுக்கு ரூ. 3 மானியம் வழங்கி வரும் தமிழக அரசுக்கு நன்றித் தெரிவிக்கிறோம். பால் மானியத் தொகையை வாரந்தோறும் உடனுக்குடன் வழங்க வேண்டும், பால் விலையை லிட்டருக்கு ரூ.10 உயா்த்தி வழங்க வேண்டும். கூட்டுறவு சங்கத்துக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும். சங்கத்துக்கு உடனே தோ்தல் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.