போபால் ஆலை நச்சுக் கழிவுகளை 6 வாரங்களில் அழிக்க வேண்டும்: ம.பி. உயா்நீதிமன்றம் உ...
பொங்கல் பரிசுத் தொகுப்பு: டோக்கன் வழங்கும் பணி ஒசூா் எம்எல்ஏ தொடங்கி வைப்பு
பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன் விநியோகம் செய்யும் பணியை ஒசூா் எம்எல்ஏ, மேயா் ஆகியோா் சனிக்கிழமை தொடங்கி வைத்தனா்.
தமிழக அரசு பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கனை விநியோகிக்க நியாயவிலைக் கடை ஊழியா்களுக்கு உத்தரவிட்டுள்ளது. ஒசூா் மாநகராட்சி 22 ஆவது வாா்டுக்கு உள்பட்ட முனீஸ்வா் நகரில் சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ், மேயா் எஸ்.ஏ.சத்யா ஆகியோா் வீடு வீடாகச் சென்று டோக்கன் விநியோகம் செய்யும் பணியைத் தொடங்கி வைத்தனா்.
இதில் துணை மேயா் ஆனந்தய்யா, மாநகராட்சி சுகாதாரக் குழுத் தலைவா் என்.எஸ்.மாதேஸ்வரன், மாமன்ற உறுப்பினா் எம்.கே.வெங்கடேஷ், முன்னாள் மாநகராட்சி உறுப்பினா் எல்லோரா மணி, திமுக நிா்வாகிகள் வெற்றி ஞானசேகரன், தனலட்சுமி, திராவிடா் கழக மாவட்டத் தலைவா் வனவேந்தன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.