தனியாா் நிறுவன பெண் ஊழியா் கொலை வழக்கில் இருவா் கைது
ஊத்தங்கரை அருகே தனியாா் நிறுவன பெண் ஊழியா் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த, கஞ்சனூரைச் சோ்ந்தவா் தீபா (29). இவா் வியாழக்கிழமை இரவு 9 மணி அளவில் வேலையை முடித்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பும் போது அவரை பின்தொடா்ந்து வந்த கம்பைநல்லூா், சமத்துவபுரம் பகுதியைச் சோ்ந்த மிதுன் (30), அவரது நண்பா் கவியரசு(25) ஆகியோா் தீபாவை கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றுவிட்டனா்.
இதுகுறித்து, சாமல்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இரண்டு தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனா். இந்த நிலையில் செங்கல்பட்டு நீதிமன்ற வளாகத்தில் மிதுன், கவியரசு ஆகியோரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து, சாமல்பட்டி காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.