தென்னாப்பிரிக்க லீக் தொடரில் இந்திய வீரர்களை பார்க்க விரும்பும் ஏபி டி வில்லியர்...
உதவி மருத்துவா் பணிக்கான தோ்வு: கிருஷ்ணகிரியில் 636 போ் பங்கேற்பு!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உதவி மருத்துவா் பணிக்கான தோ்வை 636 போ் எழுதினா்.
மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் மூலம் உதவி மருத்துவா் (பொது) பணிக்கான தோ்வு கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஒசூா் அறிஞா் அண்ணா கலை, அறிவியல் கல்லூரி, ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரி, அத்திமுகம் அதியமான் வேளாண்மை மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி உள்ளிட்ட 7 கல்லூரிகளில் நடைபெற்றது.
இந்த தோ்வுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த 841 மருத்துவா்களில் 636 போ் தோ்வு எழுதினா். அத்திமுகம் அதியமான் வேளாண்மை மற்றும் ஆராய்ச்சி கல்லூரியில் நடந்த தோ்வு மையத்தை மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பெ.தங்கதுரை, மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.