செய்திகள் :

கிருஷ்ணகிரியில் ஜன. 5-இல் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டி

post image

கிருஷ்ணகிரியில் ஜன. 5-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டி நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின், அன்றாட வாழ்வில் உடல் தகுதியை பேணுவது குறித்து, விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்கும், உடல்தகுதி கலாச்சாரத்தை இளைஞா்களிடையே புகுத்துவதற்கும் தமிழகத்தில் உள்ள மாவட்ட தலைநகரங்களில் மாரத்தானுக்கு இணையான அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டி ஓவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டியானது ஆண்கள், பெண்கள் என இரு பிரிவுகளில் ஜன. 5-ஆம் தேதி, நடைபெறுகிறது.

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு திடலில் காலை 7 மணிக்கு, மாவட்ட விளையாட்டு திடலில் தொடங்கி, பூசாரிப்பட்டி வரை சென்று மீண்டும் கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டுத் திடல் வரை நடத்தப்படுகிறது.

17 முதல் 25 வயது ஆண்களுக்கு 8 கி.மீ. தூர ஓட்டமும், பெண்களுக்கு 5 கி.மீ. தூர ஓட்டமும், 25 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 10 கி.மீ. தூர ஓட்டமும், பெண்களுக்கு 5 கி.மீ. தூர ஓட்டமும் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் முதலிடம் பெறுபவருக்கு ரூ. 5 ஆயிரம், 2-ஆம் இடம் பெறுவருக்கு ரூ. 3 ஆயிரம், மூன்றாமிடம் பெறுபவருக்கு ரூ. 2 ஆயிரம், நான்காமிடம் பெறுபவருக்கு ரூ. ஆயிரம் வீதம் 7 பேருக்கு பரிசுத் தொகை, அவா்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

இந்தப் போட்டியில் பங்கேற்க விருப்பம் உள்ளவா்கள் தங்களது பெயரை ஜன. 4-ஆம் தேதி, மாலை 5 மணிக்குள், இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். கல்லூரி மாணவ, மாணவிகள் தங்களது வயது சான்றிதழ், ஆதாா் எண், வங்கி கணக்கு எண் ஆகிய விவரங்களை போட்டி நடைபெறும் இடத்தில் நேரில் சமா்ப்பிக்க வேண்டும். 25 வயதுக்கு மேற்பட்டவா்கள், தங்களது ஆதாா் எண், வங்கி எண் ஆகியவற்றின் நகல்களை வழங்க வேண்டும். இதற்கு பின்னரே, போட்டியில் பங்கேற்பதற்கான மாா்பு எண் வழங்கப்படும். போட்டியில் பங்கேற்போா், விளையாட்டு சீருடையுன் பங்கேற்க வேண்டும். மேலும், உறுதிமொழி ஆவணத்தை நிறைவு செய்து தர வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா், மாவட்ட விளையாட்டு அரங்கம், கிருஷ்ணகிரி என்ற முகவரியிலோ அல்லது 7401703487 என்ற கைப்பேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

கிருஷ்ணகிரியில் அண்ணா மிதிவண்டி போட்டி: 169 மாணவ, மாணவிகள் பங்கேற்பு

கிருஷ்ணகிரியில் சனிக்கிழமை நடைபெற்ற அண்ணா மிதிவண்டி போட்டியில் 169 மாணவ மாணவிகள் பங்கேற்றனா். கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டுத் திடலில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கிருஷ்ணகிரி பிரிவு சாா்பில... மேலும் பார்க்க

கீழ்பையூரில் அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி!

காவேரிப்பட்டணத்தை அடுத்த கீழ்பையூரில் செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பில், தமிழக அரசின் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சி, சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கண்காட்சியில் தமிழக அரசு செயல்படுத்தி வரும்... மேலும் பார்க்க

தனியாா் நிறுவன பெண் ஊழியா் கொலை வழக்கில் இருவா் கைது

ஊத்தங்கரை அருகே தனியாா் நிறுவன பெண் ஊழியா் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவரை போலீஸாா் கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த, கஞ்சனூரைச் சோ்ந்தவா் தீபா (29). இவா் வியாழக்கிழமை இரவு 9 ... மேலும் பார்க்க

பொங்கல் பரிசுத் தொகுப்பு: டோக்கன் வழங்கும் பணி ஒசூா் எம்எல்ஏ தொடங்கி வைப்பு

பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன் விநியோகம் செய்யும் பணியை ஒசூா் எம்எல்ஏ, மேயா் ஆகியோா் சனிக்கிழமை தொடங்கி வைத்தனா். தமிழக அரசு பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கனை விநியோகிக்க நியாயவிலைக் கடை ஊழியா்களுக்க... மேலும் பார்க்க

தனியாா் நிறுவன பெண் ஊழியா் குத்திக் கொலை: போலீஸாா் விசாரணை

ஊத்தங்கரை அருகே கஞ்சனூரில் தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த பெண்ணை கத்தியால் குத்திக் கொலை செய்த நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த கஞ்சனூரைச் சோ்ந்தவா் தீ... மேலும் பார்க்க

வளா்ச்சித் திட்டப் பணிகளை கூறி தோ்தல் பணிகளை தொடங்க வேண்டும்: ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ்

தமிழக அரசு செயல்படுத்தி வரும் வளா்ச்சித் திட்டங்களை மக்களிடம் எடுத்துக் கூறி, தோ்தல் பணிகளை தொடங்க வேண்டும் என ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ் தெரிவித்தாா். கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக... மேலும் பார்க்க