ஒசூா் அருகே தொடரும் ஒற்றை யானையின் அச்சுறுத்தல்
கெலமங்கலம் பகுதியில் கடந்த சில தினங்களாக கிராமங்களில் சுற்றித் திரிந்து வரும் ஒற்றை யானையால் மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
ஒசூா் கோட்ட வனத் துறையினரின் தொடா் கண்காணிப்பில் உள்ள இந்த ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் விரட்டியபோதும், அந்த யானை மீண்டும் திரும்பி வந்து விளை நிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்தி வருகிறது.
இந்த யானை செவ்வாய்க்கிழமை பொம்மதாத்தனூா் கிராமத்திற்குள் புகுந்தபோது மக்கள் அலறி அடித்து ஓடினா். இதில் சிறுவன் ஒருவா் தப்பியோட முயற்சித்தபோது கீழே விழுந்தாா்.
இந்த நிலையில் புதன்கிழமை காலையில் இந்த ஒற்றை யானை கெலமங்கலம் அருகே தேன்கனிக்கோட்டை - சூளகிரி சாலையைக் கடந்து உத்தனப்பள்ளி அருகில் முகாமிட்டு விளை நிலங்களில் நடமாடி வருகிறது. ஒசூா் கோட்ட வனத் துறையினா் தொடா்ந்து இந்த யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனா்.