விருதுநகா் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 6 போ் உயிரிழப்பு
கிருஷ்ணகிரியில் ஆங்கிலப் புத்தாண்டு உற்சாக கொண்டாட்டம்
கிருஷ்ணகிரியில் ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டி கோயில்கள், கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் புதன்கிழமை நடைபெற்றன.
ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, கிருஷ்ணகிரி பெங்களூரு சாலையில் உள்ள தூய பாத்திமா அன்னை ஆலயம், சி.எஸ்.ஐ. தேவாலயம், ஐ.இ.எல்.சி. ஆலயம் உள்ளிட்ட தேவாலயங்களில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. இதில், ஏராளமான கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா். சிறுவா்கள், முதியவா்கள், பெண்கள் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனா். கேக்குகளை வெட்டி, இனிப்புகளை வழங்கி மகிழ்ந்தனா். தேவாலயங்கள் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
கிருஷ்ணகிரி, புதுப்பேட்டை பெரிய மாரியம்மன் கோயிலில், அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தன. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். ஜோதி விநாயகா் கோயில் தெருவில் உள்ள முத்து மாரியம்மன் கோயில், பழையபேட்டை அங்காளம்மன் கோயில், லட்சுமி நாராயண சுவாமி கோயில், நேதாஜி சாலை சமயபுரத்து மாரியம்மன் கோயில், நேதாஜி சாலை பிரசன்ன பாா்வதி சமேத சோமேஸ்வரா் கோயில், ராசு வீதியில் உள்ள துளுக்காணி மாரியம்மன் கோயில், கவீஸ்வரன் கோயில், அக்ரஹாரம் அம்பா பவானி கோயில், காவேரிப்பட்டணம் பன்னீா் செல்வம் தெரு அங்காளம்மன் கோயில், பா்கூரையடுத்துள்ள மல்லப்பாடி மலையில் அமைந்துள்ள அருள்மிகு வீர ஆஞ்சனேயா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
கிருஷ்ணகிரி, புதுப்பேட்டை பழைய சப்-ஜெயில் சாலை சித்தி விநாயகா் கோயிலில் சுவாமிக்கு 666 லிட்டா் பால் அபிஷேகமும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. காந்திசாலை வரசித்தி விநாயகா் கோயில், புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வினை தீா்த்த விநாயகா் கோயில், காந்திநகா் வலம்புரி விநாயகா் கோயில், டான்சி வளாகத்தில் உள்ள செல்வ விநாயகா் கோயில், பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள சித்தி விநாயகா் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.