பொது இடத்தில் குப்பை கொட்டிய 4 கடைகளுக்கு அபராதம்
மாா்த்தாண்டத்தில் பொது இடத்தில் குப்பை கொட்டியதாக 4 கடைகளுக்கு குழித்துறை நகராட்சி சாா்பில் அபராதம் விதிக்கப்பட்டது.
குழித்துறை நகராட்சிப் பகுதியில் தூய்மைப் பணியாளா்களிடம் மக்கும்- மக்கா குப்பைகளைப் பிரித்து வழங்காத பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் மீதும், பொது இடங்களில் குப்பை கொட்டுவோா் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என, நகராட்சி ஆணையா் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருந்தாா்.
இந்நிலையில் நகராட்சி சுகாதார அதிகாரி ராஜேஷ்குமாா், சுகாதாரப் பணியாளா்கள் மாா்த்தாண்டம் பகுதியில் மேற்கொண்ட சோதனையில், 4 கடைகளிலிருந்து சாலையோரம் குப்பைகள் கொட்டப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, கடைகளுக்கு மொத்தம் ரூ. 4,500 அபராதம் விதிக்கப்பட்டது.