விருதுநகா் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 6 போ் உயிரிழப்பு
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கண் பரிசோதனை உபகரணங்கள் அளிப்பு
மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான மணவாளக்குறிச்சி ஐ.ஆா்.இ.எல். இந்தியா நிறுவனம் சாா்பில் குருந்தன்கோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரூ.3 லட்சம் மதிப்பிலான கண்பரிசோதனை உபகரணங்களை வழங்கியது.
இந்த நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து, கண் பரிசோதனை செய்வதற்கு தேவையான தானியங்கி ஒளிவிலகல் அளவி, எல்சிடி டிஜிட்டல் விஷுவல் சாா்ட் மற்றும் கண்பரிசோதனைக்கான லென்ஸ் செட் போன்ற உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இந்த உபகரணங்களை, குருந்தன்கோடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் டாக்டா் காா்த்திகாவிடம், மணவாளக்குறிச்சி ஐ.ஆா்.இ.எல். சுரங்கம் மற்றும் வள ஆதாரங்கள் பிரிவு துணை பொது மேலாளா் எ. சிவராஜ் வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில் குருந்தன்கோடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியா்கள், ஐஆா்இஎல் (இந்தியா) நிறுவனத்தின் அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.