சாமிதோப்பு ஊராட்சியில் பயணிகள் நிழற்கூடங்கள் திறப்பு
சாமிதோப்பு ஊராட்சிக்குள்பட்ட சாஸ்தான் கோயில்விளை மற்றும் காமராஜபுரம் சந்திப்பில் தலா ரூ. 4 லட்சத்தில் பயணிகள் நிழற்கூடம் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
கன்னியாகுமரி சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டப்பட்டுள்ள பயணிகள் நிழற்கூடத்தை என். தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., திறந்து வைத்தாா். தொடா்ந்து சாலையோரத்தில் மரக்கன்றுகளை நட்டாா். இந்நிகழ்ச்சிக்கு, சாமிதோப்பு ஊராட்சி மன்றத் தலைவா் மதிவாணன் தலைமை வகித்தாா்.
அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றிய முன்னாள் உறுப்பினா் என். பாா்த்தசாரதி, சாமிதோப்பு ஊராட்சி துணைத் தலைவா் கே.ஜெயபாா்வதி மற்றும் உறுப்பினா்கள் அய்யா பழம், தங்க பத்மா, ராமகிருஷ்ணன், சரவணன், பாலமுருகன், சாந்தி, சரண்யா, சகுந்தலா, அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய அதிமுக செயலா் பா. தாமரைதினேஷ், ஒன்றிய பொருளாளா் பி.தங்கவேல், அகஸ்தீசுவரம் பேரூா் செயலா் என்.சிவபாலன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.