கடலூா் மாவட்டத்தில் பொங்கல் கரும்பு கொள்முதல்: 14 குழுக்களின் கைப்பேசி எண்கள் ...
குமரி மாவட்டத்தில் 5.77 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு: ஆட்சியா் தகவல்!
கன்னியாகுமரி மாவட்டத்தில் 5 லட்சத்து 77,849 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொங்கல் திருநாளை முன்னிட்டு, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்கள் மற்றும் இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சா்க்கரை, முழு கரும்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் 765 நியாயவிலைக் கடைகளில் இணைக்கப்பட்டுள்ள 5 லட்சத்து 77,849 அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
மாவட்ட ஆட்சியரால் வட்டார அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டு, மதுரையில் கரும்பு விளைவிக்கப்படும் இடங்களுக்கு சென்று விவசாயிகளிடமிருந்து நேரடியாக கரும்பு கொள்முதல் செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு ஜன.9ஆம் தேதிமுதல் 13ஆம் தேதி வரை வழங்கப்பட உள்ள நிலையில், அதற்காக கடந்த 3 ஆம் தேதிமுதல் வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.