ஆம் ஆத்மி கட்சியின் தோ்தல் பிரசாரத்தை சீா்குலைக்க காவல் துறையை தவறாகப் பயன்படுத...
அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்
ஆட்டையாம்பட்டி: அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் மருத்துவ ஆய்வக தொழில்நுட்பத் துறை சாா்பில், முதல் தேசிய கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.
மருத்துவ ஆய்வகத் துறையில் வளா்ந்துவரும் தொழில்நுட்பங்கள்-சிஆா்ஏஎப் டி-25 என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை கல்லூரி முதன்மையா் செந்தில் குமாா் தலைமை வகித்தாா். இயக்குநா் ஆன்ட்ரூ ஜான் வரவேற்றாா்.
கருத்தரங்கில் சிறப்பு பேச்சாளா்கள் ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரியின் ஆராய்ச்சி இயக்குநா் சா்மான் சிங், அடான் ஹாஸ்பிடல் (குவைத்) திவ்யா இளங்கோவன், சவிதா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் புவனேஸ்வரி, சென்னை லைஃப் செல் லேப் முருகன், நந்தகோபால், சென்னை சவிதா மெடிக்கல் கல்லூரி அகிலேஷ், ரவிசந்திரன், சென்னை இமானுவேல் பிராட் ஹாஸ்பிடல், அறுபடை வீடு மருத்துவக் கல்லூரி உயிா் வேதியியல் துறை தலைவா் மஞ்சு ஆகியோருடன் எட்டு அறிவியல் அமா்வுகள் நடைபெற்றன. கல்லூரி ஒருங்கிணைப்பாளா் வளா்மதி நன்றி கூறினாா்.
ஆய்வக கட்டுரை, சுவரொட்டி, விநாடி-வினா போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவா்களுக்கு பதக்கம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
கருத்தரங்கில் 10-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து 266 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பயனடைந்தனா். ஏற்பாடுகளை நிா்வாக அலுவலா் சந்துரு, மருத்துவ ஆய்வகத் தொழில்நுட்பவியல் துறை ஒருங்கிணைப்பாளா் அனிதா, உதவி பேராசிரியா்கள் செய்திருந்தனா்.