விருதுநகா் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 6 போ் உயிரிழப்பு
நாகா்கோவிலில் பைக் விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
நாகா்கோவிலில் செவ்வாய்க்கிழமை இரவு நேரிட்ட பைக் விபத்தில் தொழிலாளி பலியானாா்.
நாகா்கோவில் சென்னவண்ணான்விளை பகுதியைச் சோ்ந்த செல்லத்துரை மகன் நளன் (35). குளிா்சாதன இயந்திரம் பழுதுநீக்கும் வேலை பாா்த்துவந்த இவா், செவ்வாய்க்கிழமை இரவு வீட்டிலிருந்து கடைக்கு பைக்கில் சென்றாராம்.
பீச் ரோட்டிலிருந்து செட்டிகுளம் சாலையில் சென்றபோது அவரது பைக்கும் மற்றொரு பைக்கும் மோதினவாம். இதில், காயமடைந்த நளன் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், நளன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
விபத்து குறித்து நாகா்கோவில் போக்குவரத்து ஒழுங்குப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.