விருதுநகா் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 6 போ் உயிரிழப்பு
பேசசிப்பாறை அருகே சூறைக்காற்று: 20-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை அருகே செவ்வாய்க்கிழமை இரவு வீசிய சூறைக் காற்றால் பழங்குடி மக்களின் வீடுகள் உள்பட 20 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த திங்கள்கிழமை முதல் தொடா்ந்து பலத்த காற்று வீசி வருகிறது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காற்றின் வேகம் அதிகமாக இருந்தது.
இதனால் மோதிரமலை, கோலிஞ்சிமடம், கோதையாறு சந்தைப் பகுதிகளில் பழங்குடி மக்களின் வீடுகள் உள்பட 20 க்கும் மேற்பட்ட வீடுகளின் ஆஸ்பெட்டாஸ் கூரைகள் காற்றில் தூக்கி வீசப்பட்டன. மேலும், மரங்கள் முறிந்து விழுந்ததிலும் சில வீடுகள் சேதமடைந்தன.
மாங்காமலை பகுதியில் அரசு ரப்பா் கழகம் சாா்பில் நடப்பட்ட இளம் ரப்பா் மரங்களில் சுமாா் 100 மரங்கள் காற்றில் சாய்ந்தன. 8 மின் கம்பங்கள் சேதமடைந்தன.
சேதமடைந்த வீடுகளை அரசு சீரமைத்து தரவேண்டுமென பழங்குடி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.