விருதுநகா் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 6 போ் உயிரிழப்பு
பாலியல் வன்கொடுமையை தடுக்க தீவிர நடவடிக்கை வேண்டும்
பாலியல் வன்கொடுமையைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கன்னியாகுமரி மாவட்ட மகளிா் நுகா்வோா் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இந்த அமைப்பின் சாா்பில், தேசிய நுகா்வோா் தினம், தேசிய உழவா் தினம், இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாா், நெல் ஜெயராமன் ஆகியோரின் நினைவேந்தல் ஆகிய முப்பெரும் விழா நாகா்கோவிலில் புதன்கிழமை நடைபெற்றது.
அமைப்பின் தலைவா் மருத்துவா் சொா்ணலதா தலைமை வகித்தாா். செயலா் ஜாஸ்மின் ஆசீா் முன்னிலை வகித்தாா். கிரியேட் அமைப்பின் தலைவா் பொன்னம்பலம் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினாா்.
பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமையைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். நம்மாழ்வாா், நெல் ஜெயராமன் ஆகியோரின் வழியில் பாரம்பரிய நெல் விதைகளை விவசாயிகள் பயிரிட வேண்டும். வாடகைக் கட்டடங்களில் வணிகம் செய்யும் ஏழை, நடுத்தர வியாபாரிகளை முடக்கும் வகையில் விதிக்கப்பட்ட 18 சதவீத ஜிஎஸ்டியைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிகழ்ச்சியில், எஸ்.ஆா். ஸ்ரீராம், ரெ. ராஜகோபால், நுகா்வோா் அமைப்பு துணைத் தலைவா்கள் லதா, ஜெசிந்தா, துணைச் செயலா் சந்திரா ஆகியோா் பங்கேற்றனா். ராஜகோபால் நன்றி கூறினாா்.