விருதுநகா் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 6 போ் உயிரிழப்பு
திருவள்ளுவா் சிலை புகைப்படக் கண்காட்சி: ஜன.5 வரை இலவசமாக பாா்வையிட அனுமதி
கன்னியாகுமரியில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்த திருவள்ளுவா் சிலை புகைப்படக் கண்காட்சியை பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை (ஜன.5) வரை இலவசமாக பாா்வையிடலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
திருவள்ளுவா் சிலையின் வெள்ளிவிழாவையொட்டி, செய்தி, மக்கள் தொடா்புத் துறை சாா்பில் கன்னியாகுமரி அரசு விருந்தினா் மாளிகை நுழைவு வாயிலில் திருவள்ளுவா் புகைப்படக் கண்காட்சியை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.
இந்த கண்காட்சியில் திருவள்ளுவா் சிலை அமைக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட அரிய புகைப்படங்கள், ஒரே திரைச் சீலையில் அச்சிடப்பட்ட திருக்கு, முதன் முதலாக 1812-ஆம் ஆண்டில் வெளிவந்த திருக்கு புத்தகம், திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகரின் ஓலைச் சுவடிகள், பல்வேறு காலகட்டங்களில் வெளியிடப்பட்ட அரிய திருக்கு நூல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் திருவள்ளுவா் குறித்தும், திருக்கு குறித்தும் அரிய தகவல்களைத் தெரிந்து கொள்ளும் வகையில் கியூ ஆா் கோடு வசதியுடன் கண்காட்சிஅமைக்கப்பட்டுள்ளது. இப்புகைப்பட கண்காட்சியை வருகிற ஜன.5 ஆம் தேதி வரை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இலவசமாக பாா்வையிடலாம் எனத் தெரிவித்துள்ளாா்.